டிரம்ப் வரியை வட்டியுடன் திரும்ப தரும் அமெரிக்கா.. இந்தியர்களுக்கு கிடைக்குமா? என்ன செய்ய வேண்டும்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு விதித்த வரியை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், கூடுதல் வரியைத் திரும்பத் தரும் பணிகளை அமெரிக்க அரசு தொடங்கியுள்ளது. இந்த பணம் யாருக்கு எல்லாம் கிடைக்கும்.. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வோருக்கும் இந்த ரீபண்ட் கிடைக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்தாண்டு உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு வரிகளைப் போட்டார். இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களும் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம், டிரம்ப் விதித்த வரிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்கச் சுங்கத் துறை
இதனைத் தொடர்ந்து, சுமார் 166 பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.13.8 லட்சம் கோடி, வரியைத் திரும்ப வழங்கும் பணிகளை அமெரிக்கச் சுங்கத்துறை தொடங்கியுள்ளது. அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலை இந்த பணிகளைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய வரித் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வரித் திருப்பிச் செலுத்துதல் என்பது நேரடியாக வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்காது. மாறாக அமெரிக்காவில் பொருட்களை இறக்குமதி செய்த சுமார் 3.3 லட்சம் நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்களுக்கு மட்டுமே இப்பணம் போய்ச் சேரும். சுமார் 5.3 கோடி கப்பல் சரக்குகளுக்கு இந்த வரி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, 127 பில்லியன் டாலர் எலக்டிரானிக் பேமெண்ட் முறையில் திரும்ப வழங்கத் தயார் நிலையில் உள்ளது.
வட்டியுடன் ரீபண்ட்
முறையாக விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் வட்டியுடன் பணம் திருப்பித் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகையைப் பெற CAPE, அதாவது Consolidated Administration and Processing of Entries என்ற புதிய ஆன்லைன் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் தங்களின் வங்கி விவரங்கள் மற்றும் எந்தெந்தப் பொருட்களுக்கு வரி செலுத்தப்பட்டது என்ற விவரங்களைச் சரியாகப் பதிவேற்ற வேண்டும். ஒரு சிறிய தவறு நடந்தாலும் முழு விண்ணப்பமும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதால், ஆவணங்களில் துல்லியம் மிக முக்கியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புலம்பல்
பெரிய நிறுவனங்கள் ஒருபுறம் இருக்க, சுமார் 34,000 டாலர் வரை வரி செலுத்திய சிறு நிறுவனங்கள் இந்தத் தொகையை எதிர்பார்க்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு இது ஒரு லைப் லைனாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. இருப்பினும், பணம் கைக்கு வர பல மாதங்கள் ஆகும் என்றால், அது தங்கள் பணப்புழக்கத்தைப் பாதிக்கும் என்று சிறு வணிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நிறுவனங்கள் வரியைத் திரும்பப் பெற்றாலும், அதை விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கட்டணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும், போன்ற சில லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், தாங்கள் வரியைத் திரும்பப் பெற்றவுடன் அதைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இந்திய நிறுவனங்கள்
அமெரிக்காவின் இந்தப் பொருளாதார நடவடிக்கை அந்நாட்டு இறக்குமதியாளர்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ள அளித்துள்ளது. இருப்பினும், இதனால் கூடுதல் வரியைக் கட்டிய இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்தப் பணம் கிடைக்காது.. மேலும், இதனால் இழந்த ஆர்டர்களும் திரும்பக் கிடைக்காது. ஆர்டர்களை திரும்பப் பெற முடியாது என்ற போதிலும் அமெரிக்க நிறுவனங்களுடன் வணிக ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications