மொத்தமா முடிச்சி விட்ட ஈரான்.. புலம்பும் அமெரிக்க மக்கள்! பொருளாதாரம் மொத்தமா சரியுது!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்க நடத்திய தாக்குதல் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எகிற வைத்தது. இந்த விலை உயர்வு பிரச்சனையில் தற்போது அமெரிக்காவும் சிக்கியிருக்கிறது. அந்நாட்டில் வரலாறு காணாத வகையில் டீசல் விலை உயர்ந்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய ஈரான் உடனான அமெரிக்காவின் போர், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சப்ளையை கடுமையாக பாதித்தது. குறிப்பாக உலகில் 5ல் 1 பங்கு எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதுவே கச்சா எண்ணெய் டிமாண்டுக்கும், தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் டீசல் விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது.

US diesel prices

கடந்த ஆண்டு ஒரு கேலன் டீசல் விலை 3.71 டாலராக இருந்த நிலையில் தற்போது, 5.85 டாலராக உயர்ந்திருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர் சமயத்திலும் விலை உயர்வு இருந்ததுதான். ஆனால் இந்த அளவுக்கு இல்லை. தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வு காரணமாக, அமெரிக்காவில் சரக்கு லாரிகள், ரயில்கள், கப்பல்கள், விவசாய மற்றும் கட்டுமான வாகனங்களின் வாடகை விலையும் எகிறியிருக்கிறது. இது அப்படியே சங்கிலி தொடர் போல எதிரொலித்து.. அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்தியிருக்கிறது.

டீசல் மட்டுமின்றி பெட்ரோல் விலையும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு 3.20 டாலராக விலை இருந்த நிலையில், தற்போது 4.15 டாலராக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் மேற்கு பகுதி மாநிலங்கள்.. உதாரணமாக வாஷிங்டனில் ஒரு கேலன் டீசல் 6.81 என மற்ற பகுதிகளை விட அதிக வரியுடன் விற்கப்படுகிறது. எரிபொருள் விலை டிரம்ப் அரசை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. நவம்பர் மாதத்தில் இடைக்கால தேர்தல் வேறு வர இருக்கிறது. இந்த நேரத்தில் பார்த்தா.. விலை ஏறனும் என டிரம்ப் கோபத்தில் இருக்கிறார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக வெனிசுலா நாட்டுடன் சுமார் 65 பில்லியன் பேரல் எண்ணெய் இருப்பு கொண்ட 17 முக்கிய எண்ணெய் வயல்களை மேம்படுத்த 100 பில்லியன் டாலர் முதலீட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார். இதன் மூலம் அமெரிக்காவில் எரிபொருள் விலை விரைவில் குறையும் என்று சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், தன் மீது கை வைத்ததற்கு ஈரான் சரியான வேலையை பார்த்திருக்கிறது. தற்போது அமெரிக்க மக்கள் எல்லாம் டிரம்பைதான் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+