பிரிக்ஸ் அடித்த அடி.. அப்படியே சரிந்த அமெரிக்க டாலர்! IMF வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்
வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியத்தின் 2025ம் ஆண்டின் 2ம் காலாண்டின் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்க டாலரை பல நாடுகள் இருப்பு வைப்பதை தவிர்த்துவிட்டன என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது உலக நாடுகள் அமெரிக்க டாலரை நம்புவதை கைவிட்டுவிட்டது. இதற்கு பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
IMF COFER தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் டாலரின் பங்கு வெறும் 56.32% ஆகக் குறைந்துள்ளது. இது 1995 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிகக் குறைந்த நிலையாகும். 2001 இல் 72% ஆக இருந்த உச்சநிலையில் இருந்து, கடந்த 20 ஆண்டுகளில் டாலர் சுமார் 16% புள்ளிகளை இழந்திருக்கிறது.

வேகமாக சரியும் அமெரிக்க ராஜ்ஜியம்
இந்த சரிவு வேகமாகி வருவதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் கூட்டாக சுமார் 12 டிரில்லியன் டாலர் அன்னியச் செலாவணி கையிருப்பை வைத்துள்ளன. உலக நாடுகள் வைத்திருக்கும் வெளிநாட்டு கரன்சிகளின் லிஸ்ட்டில் பல ஆண்டுகளாக அமெரிக்க கரன்சியான் டாலர்தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அந்த காலம் மெல்ல முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் மெதுவானதாகவும், சீரற்றதாகவும், தரவுகளின்படி இதை மறுக்க முடியாதாகவும் இருக்கிறது.
தற்காலிக சரிவு அல்ல
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டின் 2ம் காலாண்டின் புள்ளிவிவரங்கள், டாலரின் பங்கு 56.32% ஆகக் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. இது 2020 இல் சுமார் 59% ஆகவும், 2005 இல் 66% ஆகவும் இருந்தது. இது ஒரு தற்காலிக சரிவு அல்ல, பல ஆண்டுகளாக நீடித்த சரிவாகும்.
தொடர் சரிவு
உலக நாடுகள், தாங்கள் வைத்திருக்கும் அமெரிக்க டாலரை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்திருக்கின்றன. இது நீண்டகாலமாக மெதுவாக நடந்து வருகிறது. இச்சரிவு இரவோடு இரவாக நடக்கவில்லை; 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு வருடத்திற்கு சுமார் 0.6 சதவீதப் புள்ளிகள் என்ற சராசரி விகிதத்தில் தொடர்ந்து சரிய ஆரம்பித்தது.
சொந்த கரன்சி
இதற்கு சீனா காரணம் கிடையாது. மாறாக, ஆஸ்திரிரேலியா டாலர், கனடடிய டாலர், சுவிஸ் பிராங்க், தென்கொரியா வான் போன்ற கரன்சிகள் டாலரின் இடத்தை நிரப்பியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் பிரிக்ஸ்தான். பிரிக்ஸ் நாடுகள் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு இடையே 60% வர்த்தகம் சொந்த கரன்சியில்தான் நடக்கிறது. இதை பார்த்த மேலை நாடுகள் சொந்த கரன்சியை பன்படுத்த தொடங்கியுள்ள. இது டாலரின் இடத்தை நிரப்பியுள்ளது.
தங்கம் வாங்கிய இந்தியா
இப்படி டாலர் சரிவதால், மற்ற நாடுகள் தங்கத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன. ரியாத், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவித்துள்ளன. உலக தங்கக் கவுன்சிலின் கூற்றுப்படி, உலக நாடுகளின் சென்டரல் பேங்குகள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு மிக அதிகமாகி இருக்கிறது. சீனா, போலந்து, இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் அதிக அளவில் தங்கம் வாங்கிருப்பது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications