அமெரிக்க தேர்தலில் டிரம்ப் ஜெயிப்பார்... ஜாதகத்தில் கிரகங்கள் சாதகம் - ஜோதிடர் கணிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் ஜெயிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அவரது ஜாதகத்தில் தென்படுவதாக பிரபல ஜோதிடர் சங்கர் சரண் திரிபாதி கூறியுள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அரியணையில் அமர்வார் என்று பிரபல ஜோதிடர் சங்கர் சரண் திரிபாதி கணித்துள்ளார். டிரம்ப் ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றாலும் அவர் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்றும் தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ஜோதிட ஆலோசகராக இருந்த சங்கர் சரண் திரிபாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தவர் ஆவார். இவர் சமூக வலைத்தளத்தில் பிரபலமாகவும் இருக்கிறார்.

இந்த ஜோதிடர்தான் இப்போது டிரம்ப் ஜாதகத்தில் இப்போது உள்ள கோள்களின் சஞ்சாரத்தை வைத்து கணித்துள்ள சங்கர் சரண் திரிபாதி, டிரம்புக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மதிப்பிற்குரிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீங்கள் மீண்டும் அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உங்களுடைய ஜாதகத்தில் தென்படுகின்றன என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சங்கர் சரண் திரிபாதி ஆல் தி பெஸ்ட் என்றும் பதிவிட்டுள்ளார்.


அமெரிக்காவில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த அதிபர் யார் என்று இன்னும் 24 மணிநேரத்திற்குள் தெரிந்து விடும். அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது இந்திய மக்களும் அடுத்த அதிபர் யார் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
நவகிரகங்கள் சாதகமாக இருந்தால் பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் அம்சமாக இருந்தால் ஒருவருக்கு வெற்றி உறுதியாகிவிடும். நவகிரகங்களில் அரச கிரகங்கள் சாதகமாக இல்லாவிட்டால் ஒருவர் என்னதான் உருண்டு புரண்டாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என்பது போல வெற்றிகனியை ருசிக்க முடியாமல் போய்விடும்.
10ஆம் இடம் தொழில் ஸ்தானம். இந்த வீட்டில் உள்ள சூரியன் டிரம்புக்கு கை மேல் பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஜோதிடர். டிரம்ப் வாக்காளர்களை ஏமாற்றியே வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டப்படுவார். அரச கிரகங்கள் சூரியன், குரு, சனி, புதன் சரியாக அமைந்திருந்தால் அவருக்கு அதிகார பதவி தேடி வரும். டிரம்ப் ஜாதகத்தில் சூரியன் சரியான இடத்தில் அமைந்துள்ளது. குருவின் பார்வையும் சூரியன் மீது விழுகிறது இதுவே டிரம்ப் வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கணித்துள்ளார் ஜோதிடர்.
அமெரிக்க தேர்தல் கருத்துக்கணிப்புகள் எல்லாமே ஜோ பிடனுக்கு ஆதரவாகவே உள்ளது. அதே நேரத்தில் ஜோதிடர்கள் கணிப்பும், எண் கணித நிபுணர்களின் கணிப்பும் டிரம்புக்கு ஆதரவாக உள்ளது. மக்களுடைய கருத்துக்கணிப்பு பலிக்கிறதா? ஜோதிடர்களின் கணிப்பு பலிக்கிறதா என்று இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications