ஈரான் மீது தாக்குதல் நடத்த ரெடியாகும் அமெரிக்கா? பெய்ரூட்டில் தூதரக அதிகாரிகள் அவசரமாக வெளியேற்றம்
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து, பணியாளர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. அத்தியாவசிய பணியில் இல்லாதவர்களை, பணியாளர்களை அமெரிக்கா விமானம் மூலமாக அழைத்து சென்றுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. ஈரானில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஈரானை எச்சரிக்கும் அமெரிக்கா
ஈரானின் உச்ச தலைவர் கமேனிக்கு எதிராக வீதிகளில் இறங்கி மக்கள் போராடிய நிலையில், போராட்டக்கார்ரர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரான் குற்றம் சாட்டியது. அதேபோல, அணு சக்தி விவகாரத்திலும் ஈரானை அமெரிக்கா கடுமையாக எச்சரித்து வருகிறது.
எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம்
ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். விரைவில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். அதோடு நிறுத்தாமல் மத்திய கிழக்கை நோக்கி, யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் உள்பட 2 பெரிய போர்க்கப்பல்களை அமெரிக்கா நகர்த்தியது.
அதேபோல, எஃப் 35, எஃப் 16 உள்பட பல போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா குவித்து வருகிறது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுப்போம் என்று ஈரானும் எச்சரித்துள்ளது. இத்தகைய பதற்றத்திற்கு நடுவே லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து, பணியாளர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.
வெளியேற உத்தரவு
அத்தியாவசிய பணியில் இல்லாதவர்களை பணியாளர்களை அமெரிக்கா விமானம் மூலமாக அழைத்து சென்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயலில் அமெரிக்கா ஈடுபட்டு இருக்கலாம் என்று லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகையில், "பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து பணிபுரியும் அவசர தேவையற்ற அமெரிக்க அரசு பணியாளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த குடும்ப உறுப்பினர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பேச்சுவார்த்தை
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தலாம் என்று சொல்லபடும் நிலையில், இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. ஈரான் 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மோசமான நிகழ்வுகள் நடக்கும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இதற்கிடையே வரும் வியாழக்கிழமை ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது அணு சக்தி திட்டம், யுரேனிய செறிவூட்டல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications