பெரும் சோகம்.. தண்ணீரில் பிணமாக மீட்கப்பட்ட ஒபாமாவின் தனி சமையல் கலைஞர்.. இறந்தது எப்படி? பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பங்களா அருகே உள்ள நீர்நிலையில் அவரது பேவரைட் மற்றும் பிரத்யேக சமையல் கலைஞர் டஃபாரி கேம்ப்பெல் இறந்து கிடந்த நிலையில் பின்னணியில் உள்ள சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக 2 முறை பதவி வகித்தவர் பராக் ஒபாமா. இவர் கடந்த 2009 முதல் 2017 வரை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று செயல்பட்டார். இதையடுத்து ஒபாமா தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் பிரபலமான மார்தாஸ் வைன்யார்ட் எனும் தீவில் 7 ஆயிரம் சதுரஅடி சொகுசு பங்களாவை வாங்கி வசித்து வருகிறார்.

இந்த பங்களா என்பது அட்லாண்டிக் கடலையொட்டிய பகுதியில் மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. ஒபாமாவிடம் தனி சமையல் கலைஞராக டஃபாரி கேம்ப்பெல் (வயது 45) என்பவர் பணியாற்றி வந்தார்.
அதாவது ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது டஃபாரி கேம்ப்பெல் வெள்ளை மாளிகையின் தலைமை சமையல் கலைஞராக இருந்தார். இவரது சமையலில் ஒபாமா மிகவும் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து ஒபாமா அவரை தனது பங்களாவில் தனக்ககான பிரத்யேக சமையற்கார குழுவில் இணைத்து கொண்டார்.
இந்நிலையில் தான் டஃபாரி கேம்ப்பெல் நேற்று முன்தினம் ஒபாமாவின் பங்களா அமைந்துள்ள பகுதியில் அட்லாண்டிக் கடல் அருகே எட்கார்டவுன் கிரேட் பாண்ட் எனும் நீர்நிலையில் paddle board-ல் பயணம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் கவிழ்ந்தது. இதில் டஃபாரி கேம்ப்பெல் தண்ணீரில் மூழ்கினார். மீட்பு பணி வேகமாக தொடங்கியது.

ஆனால் டஃபாரி கேம்ப்பெல்லை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று சோனார் மூலம் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. கரையிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்து நடந்தபோது ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஒபாமா ஆகியோர் அந்த பங்களாவில் இல்லை.
இதற்கிடையே தான் 45 வயதான டஃபாரி கேம்ப்பெல்லின் மறைவுக்கு ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛டஃபாரி கேம்ப்பெல் எங்கள் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருந்தார். அவர் மறைந்துவிட்டார் என்பது எங்களின் இதயத்தை நொறுக்குகிறது. டஃபாரி கேம்ப்பெல்லின் மறைவால் வாடும் அவரது மனைவி ஷெரிஸ், இரட்டை குழந்தைகளான சேவியர், சவின் உள்ளிட்டோரின் துக்கத்தில் பங்கெடுத்து கொள்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications