கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு H-1B விசா இல்லை! இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா.. செம ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்க விசாவுக்கான விதிகளை டிரம்ப் அரசு கடுமையாக்கியுள்ளது. இதனால் கெடுபிடிகள் அதிகமாகவிட்ட நிலையில், இந்தியர்கள் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. பலருடைய நேர்காணல்கள் 2026 அக்டோபர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார். மேலும், அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புவோரின் விசா விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹெச்-1பி விசா மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கெடுபிடிகள் அதிகமாக இருக்கிறது. விசா கிடைக்கவும் அதிகக் காலதாமதம் ஆகிறது.

நேரடிப் பாதிப்பு
குறிப்பாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கே நேரடிப் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஹெச்-1பி விசாக்களை இந்தியர்களே அதிகம் பயன்படுத்தும் நிலையில், இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் கடந்த சில வாரங்களாக ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறதாம். இதனால் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு வருடம்
டிசம்பர் 2வது வாரம் நேர்காணலுக்குக் காத்திருந்தோரின் விண்ணப்பங்கள் முதலில் பிப்ரவரி மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இப்போது அது அடுத்தாண்டு அக்டோபர் மாதத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஜனவரி மாதம் நடக்கவிருந்த விசா நேர்காணல்களும் இதேபோல 2026 இறுதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் விசா பெறுவதில் ஓராண்டு வரை தாமதம் ஆகலாம் என சொல்லப்படுகிறது.
விசா கோரி விண்ணப்பிப்போரின் சோஷியல் மீடியா கணக்குகளை ஆய்வு செய்து, அதன் பிறகு விசா வழங்கும் திட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. அமெரிக்க அரசுக்கு எதிராக அல்லது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்போருக்கு விசா வழங்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி சோஷியல் மீடியா கண்காணிப்பு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன் காரணமாகவே விசா நேர்காணல்கள் இப்படி மாதக் கணக்கில் ஒத்திவைக்கப்படுகிறது.
வேலை போகலாம்
இருப்பினும், இந்தளவுக்குத் தாமதமானால் பல இந்தியர்கள் வேலையை இழக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகச் செய்தித் தொடர்பாளர் டெக்கான் க்ரோனிக்கிள் இதழிடம் கூறுகையில், "தேவை மற்றும் எங்களிடம் உள்ள விசா அதிகாரிகளைப் பொறுத்து நேர்காணல் தேதிகளை மாற்றி அமைக்கிறோம். யாருக்கு எப்போது நேர்காணல் என்பது குறித்த தகவல் நேரடியாக விசா கோரி விண்ணப்பிப்போருக்கு அனுப்பப்படும். எதாவது மாற்றம் இருந்தாலும் இதே முறையில் தகவலைத் தெரிவிப்போம்" என்றார்.
இது தொடர்பாக அமெரிக்கக் குடியேற்ற வழக்கறிஞர்கள் கூறுகையில், "இந்த விவகாரத்தில் நம்மால் பெரிதாக எதையும் செய்ய முடியாது. சட்ட ரீதியாக நம்மிடம் வாய்ப்புகள் இல்லை. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் நிறுவனங்களிடம் ஒர்க் பர்ம் ஹோமிற்கு அனுமதி கோர வேண்டும் அல்லது நீண்ட தூர விடுப்பு எடுக்க வேண்டும். அதுவே ஒரே தீர்வு. தங்களுக்கு அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து வரும் மெயில்களையும் தகவல்களையும் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும்" என்றார்.
பாதிப்பு அதிகம்
விசா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் தங்கள் அமெரிக்கப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர். நேர்காணல் தள்ளிப்போனதால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். மேலும், விசாவை புதுப்பிக்க அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர்களும் நேர்காணல் தேதிகள் இல்லை என்பதை அறிந்து கலை அடைந்தனர். இதனால் எப்படி மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்ல முடியும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications