இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே
வாஷிங்டன்: ஹெச்-1பி விசா தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் அங்குச் செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையே நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் சம்பள விதிமுறைகளைக் கடுமையாக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பல பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாகக் கடந்தாண்டு தான் H1B தொடர்பாக டிரம்ப் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதனால் இந்தியர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.

விதிகளில் மாற்றம்
இதற்கிடையே இப்போது டிரம்ப் அரசு, H1B விசாவில் மேலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி H1B விசாவில் ஊழியர்களைப் பணியமர்த்தும் செலவை உயர்த்தும் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது. மேலும், ஹெச்-1பி விசாவுக்கு தகுதி பெறும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பையும் இது அதிகரிக்கும். அமெரிக்கத் தொழிலாளர்கள் நலத்துறை மூலம் விதிகள் மாற்றப்படுவதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, தொழிலாளரின் அனுபவத்திற்கேற்ப குறைந்தபட்ச சம்பளத் தேவை 21% முதல் 33% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறை தொடர்பாகப் பொதுமக்கள் அடுத்த 60 நாட்கள் கருத்து தெரிவிக்கலாம். இறுதி விதிகள் வெளியான பிறகும் கூட அதை எதிர்ப்போர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரலாம்!
டிரம்ப்
அதிகளவில் வெளிநாட்டினர் ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வருவதால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அதைத் தடுப்பதாகச் சொல்லி டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், அதில் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்த முயற்சி வெற்றி அடையும் என உறுதியாகச் சொல்ல முடியாது. இதற்கு முன்பு அவர் 2016-2020 வரை முதல்முறை அதிபராக இருந்த காலகட்டத்திலும் H1B விசாக்களின் வருகையைத் தடுக்க இதே முயற்சி எடுக்கப்பட்டது. இருப்பினும், குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த, உரிய விளக்கம் தரவில்லை என அமெரிக்க நீதிபதிகள் அதைத் தடுத்து நிறுத்தினர்.
மாறும் விதிகள்
இந்தச் சூழலில் தான் மீண்டும் அதேபோல ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்கத் தொழிலாளர் நலத்துறை ஊதியங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை மாற்றியமைக்க ஒரு விதிமுறையை வெளியிட்டுள்ளது. H1B, H1B1, E3, EB2 மற்றும் EB3 விசா வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது பொருந்தும். முன்பு குறிப்பிட்ட பிரிவில் வழங்கப்படும் சராசரி ஊதியமே தகுதியாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது அதை மாற்றி சராசரி ஊதியத்தை விட அதிக சம்பளம் வாங்குவோர் மட்டுமே தகுதி பெறும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
H1B பணியாளர்களுக்கான சம்பளங்கள் உயர்த்தப்பட்டால், வெளிநாட்டு ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் பணியமர்த்துவதிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் பின்வாங்கும். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே டிரம்ப் தரப்பின் வாதம். இருப்பினும், தற்போதைய போட்டி நிறைந்த உலகில் இதுபோன்ற தேவையில்லாத மாற்றங்கள் அமெரிக்காவுக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும் எனப் பல வல்லுநர்கள் விமர்சிக்கிறார்கள்.
இந்தியர்களுக்கு நல்லதா? கெட்டதா?
மேலும், இப்போது H1B, EB-2 மற்றும் EB-3 கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, இதில் வரும் மாற்றங்கள் இந்தியர்களைத் தான் நேரடியாகப் பாதிக்கும். இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், அதிக திறமையான மற்றும் அனுபவமிக்க இந்தியர்களுக்குப் பல வாய்ப்புகள் உருவாகும். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே அதிக சம்பளம் வாங்குவார்கள். இந்த விதிகள் மூலம் அவர்களுக்கு ஈஸியாக H1B விசா கிடைக்கும்.
அதேநேரம் சமீபத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் இதனால் பல சிக்கல்களை எதிர்கொள்வார்கள். அவர்கள் குறைந்த சம்பளத்திலேயே வேலை கிடைத்திருக்கும். திறமையான நபராக இருந்தாலும் சம்பள விதிகளைப் பூர்த்தி செய்யக் குறிப்பிட்ட காலம் ஆகும். இந்தச் சூழலில் புதிய விதிகளால் அவர்கள் பாதிக்கப்படலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications