அம்மாடியோ! அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் அழுததற்கு ரூ 800 தீட்டிய மருத்துவமனை! பகல் கொள்ளையா இருக்கே
வாஷிங்டன்: அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று ரூ 800 கட்டணத்தை வசூலித்துள்ளது.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு சென்றுவிட்டு வந்தாலே அதற்கு செலவாகும் கட்டண விவரங்கள் மிக பெரிய நீளத்திற்கு இருக்கும். எல்லா மருத்துவமனைகளையும் பணம் பிடுங்கும் மருத்துவமனையாக நாம் முத்திரை குத்திவிட முடியாது.
நோயாளிகளின் ரத்தத்தை உறிஞ்சாத குறையாக பணத்தை பிடுங்கும் சில மருத்துவமனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இதில் இன்சூரன்ஸ் என்றால் அது வேறு. இதெல்லாம் பொத்தாம் பொதுவாக சிலர் அனுபவித்த பிரச்சினைகள்தான்.

பணம் பிடுங்குதல்
ஆனால் அமெரிக்காவில் இப்படியெல்லாம் பணம் பிடுங்குவார்களா என நினைப்போருக்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த சம்பவம் இருக்கிறது. ஆம் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண்ணுக்கு மச்சத்தை நீக்க அறுவை சிகிச்சைக்கு தயாராகியுள்ளார். இந்த சிகிச்சைக்கு முன்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகவே இருந்துள்ளார்.

சகஜம்
இதையடுத்து அச்சத்தில் அழுதுள்ளார். பின்னர் இதெல்லாம் சகஜம் என உணர்ந்த அந்த பெண் அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு வீடு திரும்ப தயாராகினார். அப்போது அவருக்கு மருத்துவமனை நிர்வாகி மருத்துவக் கட்டணங்களை கொண்டு வந்தார். அதை பார்த்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

11 டாலர்
அதில் ப்ரீப் எமோஷன் என போட்டு அதற்காக 11 டாலர் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு தள்ளுபடியாக 2.20 டாலர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த மருத்துவமனை நிர்வாகியிடம் அந்த பெண் கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி அந்த பெண் அழுததற்காக 22 டாலர் விதிக்கப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பணத்தை செலுத்திவிட்டு வந்தார். இதையடுத்து தனக்கு வரப்பட்ட பில் தொகையை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு கண்டனம்
இதை பார்க்கும் நெட்டிசன்கள் மருத்துவமனைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் மச்சத்தை நீக்குவதற்கெல்லாம் அறுவை சிகிச்சைக்கு சென்றால் இப்படித்தான் அனாயசயமாக கட்டணங்கள் விதிக்கப்படும் என்கிறார் ஒரு வலைஞர். அதாவது அவசியத் தேவைக்கு மட்டுமே அறுவை சிகிச்சை என்ற காலம் போய் இது போன்ற பிரச்சினைகளுக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் உடல் நிலை பாதிக்கக் கூடும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
-
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications