நாளை ரொம்ப முக்கியம்! பைடன் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள்.. எதிரில் டிரம்ப் வேற ரெடியாக இருக்காரே
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் பைடன் மற்றும் டிரம்ப் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இதற்கிடையே இருவருக்கும் இடையேயான முதல் விவாதம் நாளை நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற விவாதங்கள் அதிபர் தேர்தலையே தீர்மானிக்கும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இதன் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இப்போது அதிபராக பைடன் இருக்கிறார். அங்கு இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் மீண்டும் களமிறங்குகிறார்.

முதல் விவாதம்: அதேபோல எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இதற்கிடையே அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் போட்டியிடும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பு இடையேயான முதல் விவாதம் நாளை நடைபெற உள்ளது. இதை அங்குள்ள பிரபல சிஎன்என தொலைக்காட்சி தொகுத்து நடத்துகிறது. இந்த விவாதத்திற்கு சிஎன்என் நிர்வாகம் பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. அதற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவாதத்தில் பைடன் மற்றும் ட்ரம்பிற்கு அதிநவீன மைக் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மைக்கில் பச்சை நிற விளக்குகள் உள்ளன.. அந்த பச்சை விளக்குகள் எரியும் போது மைக் ஆன் ஆகி இருக்கிறது என்பதை இரு வேட்பாளர்களும் அறிந்து கொள்ளலாம். மேலும், ஒருவர் பேசும் போது மற்றொரு நபரின் மைக் முடக்கப்பட்டு இருக்கும். இதனால் அவர் இடைமறித்துப் பேசவோ குறுக்கிடவோ முயன்றாலும் அவரது குரல் டிவி லைவில் கேட்காது.
ஏகப்பட்ட ரூல்ஸ்: அங்குள்ள மூத்த தொகுப்பாளர்கள் ஜேக் டேப்பர் மற்றும் டானா பாஷ் ஆகியோர் இந்த விவாதத்தை நடத்த உள்ளனர். 90 நிமிடங்கள் நடக்கும் இந்த விவாதத்தில் இரண்டு இடைவெளி இருக்குமாம். இந்த ஒட்டுமொத்த விவாதத்தின் போதும் ஜோ பைடன், டிரம்ப் இருவரையும் அவரது பிரச்சார குழு தொடர்பு கொள்ளக்கூடாது என்ற விதியும் இருக்கிறதாம். அதாவது மேடை ஏறிவிட்டால் அவர்களுக்கு வெளியே இருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காது.
மேலும் ஒருவர் பேசும் போது அதை மற்றொருவர் இடைமறித்துப் பேச அனுமதி இல்லை. குறிப்புகளை எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை. இரு தலைவர்களுக்கும் ஒரு பேனா, ஒரு பேப்பர் மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இன்னாள் அதிபர் பைடனும், முன்னாள் அதிபர் டிரம்பும் விவாதத்தில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. இதனால் இந்த விவாதத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மைக் விதி முக்கியம்: இந்த விவாதத்திற்கு செட் செய்யப்பட்ட விதிகளில் இந்த மைக் விதிகள் தான் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இருவரது சமீப கால நடவடிக்கையும் அங்குப் பேசுபொருளாகி வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்கும் பைடன் 81 வயதாகிறது. அவர் அவ்வப்போது திடீரென பொதுவெளியில் என்ன செய்கிறோம் என்பதை மறந்து உறைந்து போய் நிற்கிறார்.
அதேபோல டிரம்பிற்கு 78 வயதாகிறது. அவர் சில நேரங்களில் என்ன பேசுவது என்பதை மறந்து உளறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இரு தரப்பிற்குமே இப்படியொரு பிரச்சினை இருப்பதால் மைக் ஆப் செய்யும் விதி பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாள்: அமெரிக்காவில் இந்தாண்டு நவ. 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அங்கு இதுபோன்ற விவாதங்களுக்கு மிகப் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த விவாதங்களில் சொதப்பினால் பெரியளவில் வாக்கு சரியவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி அமெரிக்கத் தேர்தலையே தீர்மானிக்கும் முதல் விவாதம் நாளை நடக்கும் நிலையில், இதில் யார் வெல்வார்கள் என்பதில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம்












Click it and Unblock the Notifications