வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெம்டிசிவிர் மருந்து வாவ்.. சீரியசாக உள்ள கொரோனா நோயாளிகளும் குணமடைகிறார்கள்! அமெரிக்கா அவசர அனுமதி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதித்த COVID-19 நோயாளிகளுக்கு, ரெம்டிசிவிர் என்ற ஊசி மருந்தை பயன்படுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு சம்மதம் தெரிவித்ததையடுத்து, அவசர உத்தரவு மூலம், அந்த மருந்தை அங்கீகரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

Recommended Video

    கொரோனாவுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய மருந்துக்கு விரைவில் அங்கிகாரம்

    ரெம்டிசிவிர் மருந்தால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் குணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவசர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    ஜிலெட் சயின்சஸ் என்ற நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து வருகிறது. வெள்ளை மாளிகையில், அந்த நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டேனியல் ஓ டேயுடன் இணைந்து நிருபர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இது மிகவும் நம்பிக்கையளிக்கும் செய்தி என்று தெரிவித்தார்.

    மோசமாகும் நிலை.. சென்னையில் ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா.. 88 பேருக்கு காண்டாக்ட் இல்லை.. சிக்கல்!மோசமாகும் நிலை.. சென்னையில் ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா.. 88 பேருக்கு காண்டாக்ட் இல்லை.. சிக்கல்!

    ஊசி மருந்து

    ஊசி மருந்து

    டேனியல் அளித்த பேட்டியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முதலில் ரெம்டிசிவிர் மருந்தை கொடுக்க உள்ளோம். நோயாளிகளுக்கு மருந்து கிடைக்க எந்த தடையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு தெரிவித்தார். ரெம்டிசிவிர் மருந்து ஊசி மூலம் கொடுக்கப்படுகிறது. க்ளீனிக்கல் டிரையலுக்கு பெயரை பதிவு செய்த, நோயாளிகளுக்கு ஏற்கனவே இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. மேலும் 15 லட்சம் மருந்துகளை இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக டேனியல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடுமையான பாதிப்பு

    கடுமையான பாதிப்பு

    COVID-19 பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அல்லது பெரியவர்களுக்கு, ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம், உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.

    எது தீவிர பாதிப்பு

    எது தீவிர பாதிப்பு

    குறைந்த இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கொண்டிருப்பது, ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுவது அல்லது வென்டிலேட்டரில் இருப்பது ஆகியவைதான் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கான அடையாளம் என, இதை அந்த அமைப்பு வரையறுக்கிறது. அப்படிப்பட்ட நோயாளிகளுக்குத்தான் ரெம்டிசிவிர் மருந்தை கொடுக்க வேண்டும்.

    விரைவான முன்னேற்றம்

    விரைவான முன்னேற்றம்

    அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (என்ஐஐஐடி) புதன்கிழமை ரெம்டிசிவிர் மருந்தை உட்கொண்ட 1,000 க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை அறிவித்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் கொடுத்து பார்த்தபோது, அந்த மருந்தை எடுக்காத பிற நோயாளிகளைக் காட்டிலும் விரைவாக உடல்நிலை முன்னேறியது கண்டறியப்பட்டது.

    குறிப்பாக, மருந்தை உட்கொண்ட நோயாளிகள் 31 சதவிகிதம், அதிக வேகத்தில் குணமடைந்தனர். இந்த நிலையில், ரெம்டிசிவிர் மருந்துக்கு, அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது டொனால்ட் ட்ரம்ப் அரசு.

    இந்தியாவிற்கும் மருந்து

    இந்தியாவிற்கும் மருந்து

    "உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு போதுமான மருந்துகளை உருவாக்க நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது இன்றியமையாததாக இருக்கும், மேலும் இந்த கூட்டு முயற்சிகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்தியா உட்பட பல நாட்டு மருந்து கம்பெனிகளுடன் ரெம்டிசிவிர் மருந்தை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்று அந்த எவ்வாறு ரெமெடிசீவரை கொண்டு வரலாம் என்பது குறித்து பல்வேறு குழுக்களுடன் கலந்துரையாடி வருகிறோம். வளரும் நாடு, " ஜிலெட் மருந்து நிறுவனம் கூறியுள்ளது

    English summary
    The experimental drug remdesivir has been authorized by US regulators for emergency use against COVID-19, President Donald Trump announced Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X