"கருணை உள்ளம்".. நீதிபதி பிராங்க் கேப்ரியோ புற்றுநோயால் மறைவு.. இணையதளத்தில் பிரபலமானவராச்சே
வாஷிங்டன்: ஒரு வழக்கை விசாரிக்கும்போது நீதிபதிகள் எப்போதும் தண்டனையை மட்டுமே வழங்குவது இல்லை. நீதிபதிகளும் கருணை, மனிதாபிமானத்துடன் ஒவ்வொரு வழக்குகளையும் அணுகி வருகிறார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியவர் தான் நீதிபதி பிராங்க் கேப்ரியோ. அமெரிக்காவை சேர்ந்தவர். உலகின் மிகவும் கனிவான, மனிதாபிமானம் கொண்ட நீதிபதி என்று பெயர் பெற்ற பிராங்க் கேப்ரியோ கணைய புற்றுநோயால் இன்று காலமானார்.
நீதிமன்றம்.. இந்த பெயரை கேட்டாலோ நாம் அனைவரின் கண் முன் வருவது கம்பீரமான நீதிபதிகள்.. கருப்பு நிற உடை அணிந்து கூட்டம் கூட்டமாக வலம் வரும் வழக்கறிஞர்கள்.. குற்றம்சாட்டப்படவர்களை அழைத்து வரும் போலீஸ்காரர்கள்.. இதுதான் நம் நினைவுக்கு வரும். எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமின்றி இருக்கும் நீதிமன்ற வளாகமே இப்படி என்றால் நீதிமன்ற அறையை நினைத்து பாருங்கள்..

ஒய்யாரமான நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நீதியரசர்களே பார்த்தாலே பலரது மனதிலும் பதற்றம் தொற்றி கொள்ளும். பலரும் லேசாக உடல் நடுங்கும். அதுமட்டுமின்றி அவர்கள் மீது ஒருவித பயம்- பதற்றத்துடன் கூடிய மரியாதை இருக்கும். இதற்கு நீதிபதிகள் என்றாலே தண்டனை வழங்குபவர்கள் என்ற எண்ணம் நம்மிடம் இருப்பது தான் காரணம்.
நீதிபதி பிராங்க் கேப்ரியோ
ஆனால் உண்மையில் நீதிபதிகள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஒவ்வொரு வழக்குகளிலும் தீர்ப்பு சொல்லும்போது சாட்சி, ஆதாரங்கள் மட்டுமின்றி குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து யோசித்து தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் பல நீதிபதிகள் இன்றும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளனர்.
அந்த வகையில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்த நீதிபதி தான் பிராங்க் கேப்ரியோ. சிரித்த முகம், கண்களுக்கு பொருத்தமான கண்ணாடி.. நீதிமன்றத்துக்கு வரும் முதியவர்கள், பெற்றோருடன் வரும் குழந்தைகளிடம் பக்கத்து வீட்டுக்காரர் போல் புன்முருவலுடன் விசாரணையை தொடங்கும் குணம் கொண்டவர் தான் இந்த பிராங்க் கேப்ரியோ.
புற்றுநோயால் பிரிந்த உயிர்
இந்நிலையில் தான் பிராங்க் கேப்ரியோ தனது 88 வது வயதில் இன்று காலமானார். கணைய புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவ சிகிச்சைகளை அவர் எடுத்து வந்த நிலையில் இன்று அவர் காலமானார். இதுதொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராங்க் கேப்ரியோ அமெரிக்காவின் ரோட் தீவின் பிராவிடன்ஸில் பிறந்தார். இவர் முனிஷிபல் நீதிபதியாக பணியாற்றினார்.
மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு
கடந்த 2018 முதல் 2020 வரை அவர் விசாரிக்கும் வழக்குகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நீதிபதி என்பவர் தண்டனையை மட்டுமே வழங்குபவர் இல்லை. விதிமீறல், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை மட்டுமே கொடுக்க கூடாது. அவர்களின் இடத்தில் இருந்தும் யோசித்து பார்த்து மன்னிப்பும் வழங்கலாம் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர்.
நீதிபதி எப்போதும் நியாயம், இரக்கம் மற்றும் மனிதாபிமானம், மரியாதை உள்ளிட்டவற்றை மனதில் வைத்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை அவரது Caught In Providence நிகழ்ச்சி உலகிற்கு எடுத்து காட்டியது. கடந்த 2023 ஆம் ஆண்டில், தனக்கு கணையப் புற்றுநோய் இருப்பதாக அவர் தெரிவித்த நிலையில் இன்று காலமாகி உள்ளார். காலமான பிராங்க் கேப்ரியோவக்கு வயது 88 ஆகும்.
93 வயது முதியவரின் வழக்கு
இவரது மனிதாபிமானம், கருணைக்கு சாட்சியாக சில வழக்கு விசாரணையை உங்களுக்கு சொல்லலாம். அதாவது 96 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் மீது போக்குவரத்து விதிமீறல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த முதியவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி பிராங்க் கேப்ரியோ முன்பு நிறுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி பிராங்க் கேப்ரியோ, ‛‛நீங்கள் School Zone-யில் விதிமீறி கார் ஓட்டி உள்ளீர்கள்’’ என்று கேட்பார். அதற்கு அந்த முதியவர், ‛‛எனக்கு 96 வயது ஆகிறது. நான் எந்த விதியையும் மீறவில்லை. காரை மெதுவாக தான் ஓட்டி சென்றேன். நான் எனது மாற்றத்திறனாளி மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்’’ என்று கூறுவார்.
இதையடுத்து நீதிபதி பிராங்க் கேப்ரியோ, ‛‛உங்களின் மகனுக்கு எத்தனை வயது ஆகிறது’’ என்று கேள்வி எழுப்புவார். அதற்கு முதியவர், ‛‛63 வயது ஆகிறது. ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு 2 வாரத்துக்கும் ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகிறேன்’’ எனக்கூறி கண்கலங்குவார்.
நல்ல மனிதர் என பாராட்டு
இதையடுத்து பிராங்க் கேப்ரியோ, ‛‛நீங்கள் ஒரு நல்ல மனிதர். நீங்கள் 90 வயதை கடந்து உள்ளீர்கள். இப்போதும் உங்களின் மகனை கவனித்து கொள்கிறீர்கள். உங்களின் மகன் நல்ல உடல்நலம் பெற நான் வாழ்த்துகிறேன். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்’’ என்று கூறுவார். அதற்கு முதியவர்கள் கண்ணீர் விட்டபடி ‛‛Thank You’’ என்பார்.
நீதிபதி பிராங்க் கேப்ரியோ நினைத்து இருந்தால் அந்த முதியவருக்கு தண்டனை வழங்கி இருக்க முடியும். ஏனென்றால் அமெரிக்காவில் போக்குவரத்து விதிமீறல் செய்பவர்கள் நீதிமன்றம் அழைத்து வரும்போது அதற்கான சிசிடிவி காட்சி பதிவு உள்பட உரிய ஆதாரங்களுடன் தான் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள். ஆனால் பிராங்க் கேப்ரியோ அந்த முதியவரின் இடத்தில் இருந்து யோசித்து வழக்கை தள்ளுபடி செய்திருப்பார். இதுபோல் பல வழக்குகளில் அவர் குற்றம்சாட்டப்பட்டவர்களின் இடத்தில் இருந்து யோசித்து தீர்ப்பு வழங்கி இருப்பார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் ஏராளமாக உள்ளன.
இணையவாசிகள் இரங்கல்
இப்படி நீதிபதியாக இருந்தாலும் தலைக்கணம் இன்றி மக்களின் நண்பனாக செயல்பட்டு வந்த இந்த நீதிபதி பிராங்க் கேப்ரியோ இன்று கணைய புற்றுநோயால் காலமாகி உள்ளார். மறைந்த பிராங்க் கேப்ரியோவிற்கு இணையவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
அமெரிக்காவுக்கு முதல் பெரிய அடி.. ஈரான் நடத்திய தாக்குதலில் F-35 விமானம் சேதமடைந்ததாக தகவல்! -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications