இந்தியர்களுக்கு அதிர்ச்சி தந்த டிரம்ப்.. தெரியாமல் போட்ட ஒரு போஸ்ட் கூட அமெரிக்க கனவை காலி செய்யும்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று முதல் விசா கோரி விண்ணப்பிப்போரின் சமூக வலைத்தளப் பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு சோஷியல் மீடியா போஸ்ட் கூட இனி ஒருவருக்கு விசாவை கிடைக்காமல் செய்துவிடும். அமெரிக்கா எதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இன்று டிசம்பர் 15ம் தேதி முதல் ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசா கோரி விண்ணப்பிப்போரின் சோஷியல் மீடியா கணக்குகளை ஆய்வு செய்யும் புதிய நடைமுறையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்கள் அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்கவே இந்த புதிய ரூல்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.

விசா விதிமுறைகள்
அமெரிக்க விசா என்பது ஒரு உரிமை இல்லை.. அது ஒரு சலுகை தான் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தில் குடிவரவு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இந்த விதி அமலுக்கு வரும் முன்பே, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பல விசா நேர்காணல்களை ரத்து செய்திருந்தது. இதனால் அமெரிக்கா செல்ல விரும்பியவர்களால் சரியான நேரத்தில் விசா நேர்காணலை முடித்து விசா வாங்க முடியவில்லை. இதுவே இந்தியர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருக்கும் நிலையில், இப்போது டிரம்ப் நிர்வாகம் சோஷியல் மீடியாவை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் சோஷியல் மீடியா கணக்குகளை பிரைவேட் என்பதில் இருந்து public என்பதாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா உத்தரவு
இது தொடர்பாகக் கடந்த டிசம்பர் 3ம் தேதி அமெரிக்கா உள்துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், "விசா பரிசீலனையின் போது கிடைக்கும் அனைத்துத் தகவல்களையும் ஆய்வு செய்வோம். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தரக்கூடிய விண்ணப்பதாரர்களை அடையாளம் காண்பதே இதன் நோக்கம்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கே பாதிப்பு அதிகம்
ஹெச்-1பி விசாக்களை பொறுத்தவரை.. ஒவ்வொரு ஆண்டும் அதில் சுமார் 70% இந்தியர்களுக்கே ஒதுக்கப்படுகிறது. இந்தியர்களுக்கு அடுத்து சீனா நாட்டிற்கு அதிக விசா தரப்படுகிறது. சீனர்கள் 11 முதல் 12 சதவீதம் பேர் ஹெச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளனர். அப்படி என்றால் இந்தியர்கள் எந்தளவுக்கு இதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது புரிந்திருக்கும்.
ஏற்கனவே பல்வேறு சோதனைகள், பல மாத காத்திருப்பு முடிந்த பிறகு இப்போது திடீரென சோஷியல் மீடியாவை சரிபார்க்கிறேன் எனச் சொல்வதில் எந்தவொரு நியாயமும் இல்லை என பலரும் விமர்சித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு போஸ்ட் போட்டதைக் காரணம் காட்டி விசா நிராகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
சோஷியல் மீடியா
விசா கோரி விண்ணப்பிப்போரின் சோஷியல் மீடியாவில் எதை செக் செய்கிறார்கள் என்பது குறித்துத் தெளிவான விளக்கங்கள் இல்லை. இருப்பினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலான போஸ்ட்கள் செக் செய்யப்படும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பிற அச்சுறுத்தல்களாக இருப்பவர்களுக்கு ஆதரவான கருத்துகள், யூத-விரோதக் கருத்துகள் அல்லது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், உதவி செய்பவர்களை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன" என்றார்.
இது ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம் ஏற்கனவே கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஹெச்-1பி விசா நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் தங்கள் வேலையை இழக்கும் சூழலுக்கு இந்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விசா கிடைக்கும் வரை அவர்கள் இந்தியாவில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications