தமிழக பட்ஜெட்டுக்கு சமம்.. ஈரான் போரில்.. அமெரிக்கா இழந்தது மட்டும் இத்தனை கோடியா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சும்மா இந்த ஈரான் மீது போருக்கு போகிறோம் என்று சொல்லி அமெரிக்கா சண்டை செய்து வருகிறது. ஆனால், இந்த போரில் வெறும் 4 மாதத்தில் மட்டும் அமெரிக்கா மிகப்பெரிய அளவுக்கு செலவு செய்திருக்கிறது. இந்த தொகையை வைத்திருந்தால்.. தமிழகத்திற்கு 6 மாதங்களுக்கு பட்ஜெட்டை போட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமை ஆய்வாளர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கி.. ஜூன் மாதம் 30ம் தேதி வரை வெறும் 4 மாதத்தில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ரூ.2.8 லட்சம் கோடிக்கு மேல் இழந்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

US Iran military

தமிழகத்தின் ஆண்டு பட்ஜெட் ரூ.4.4 லட்சம் கோடி. அதாவது, அமெரிக்கா இழந்த பணத்தை வைத்து.. 6 மாதங்களுக்கு பட்ஜெட் போட முடியும். அமெரிக்காவின் மொத்த இழப்பில், பெரும்பகுதி ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளை பயன்படுத்துவதற்கே செலவாகியிருக்கிறது. போர்க்களத்தில் இழந்த மற்றும் சேதமடைந்த ராணுவ உபகரணங்களின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடியாகும்.

ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால், அமெரிக்காவின் பல அதிநவீன போர் விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சில விமானங்கள் பலத்த சேமடைந்தமடைந்திருக்கின்றன. ட்ரோன்களை எடுத்துக்கொண்டால்.. அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.250 கோடியாகும். மொத்தம் 30 ட்ரோன்களை ஈரான் அழித்திருக்கிறது.

போர் விமானங்கள் என்று வந்தால், F-15E ரக போர் விமானங்களில் 4, F-35A ர விமானம் ஒன்றும், A-10 ரக விமானம் ஒன்றும் சேதமடைந்திருக்கின்றன. இது போக வான்வழியில் எரிபொருளை நிரப்பும் KC-135 விமானங்கள் 7 சேதமடைந்திருக்கின்றன. இதில் 5 விமானங்கள் சவுதியில் லேண்ட் ஆனபோது தாக்குதலுக்கு உள்ளாகின.

இதுதவிர, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் ஈரானிய ஏவுகணை தாக்குதல்களால் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் முதன்மை தளவாட மையம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் கடுமையாக தாக்கப்பட்டது இந்த அறிக்கையில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஈராக், குவைத், சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் ஈரானிய வான்வழி தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. இதை சரி செய்ய ரூ.1,540.5 கோடி தேவைப்படும்.

இதை விட முக்கியமான விஷயம் என்னவெனில், போர் காரணமாக அமெரிக்காவின் அதிநவீன துல்லிய ஏவுகணைகள் வேகமாக காலியாகியுள்ளன. தற்போது ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மறு உற்பத்தி செய்ய அமெரிக்கா உடனடியாக உத்தரவிட்டிருக்கிறது. டிரம்ப் ஆயுத பற்றாக்குறை எல்லாம் ஒன்னும் இல்லை என்று பேசி வந்த நிலையில், பென்டகனின் இந்த அறிக்கை உண்மையை வெளியில் கொண்டு வந்திருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்ற வரவு செலவு அலுவலகம் வெளியிட்டிருக்கும் இன்னொரு அறிக்கையில், போர் நீடித்தால் அமெரிக்காவில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+