மொத்தமாக மாறிய முகம்.. தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை! இப்படி கூட நடக்குமா
வாஷிங்டன்: கிட்னி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்தெல்லாம் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், முக மாற்று அறுவை சிகிச்சை குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் மருத்துவம் பல மடங்கு வளர்ச்சியடைந்துவிட்டது. இதன் காரணமாக கிட்னி, கல்லீரல் அவ்வளவு ஏன் இதயம் பாதிக்கப்பட்டால் கூட அறுவைச் சிகிச்சை செய்ய முடிகிறது.

முக மாற்று அறுவை சிகிச்சை: ஆனால், இங்கே அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகில் வெகு சிலருக்கு மட்டுமே இந்த முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. அதென்ன முக மாற்று அறுவை சிகிச்சை.. இதை எப்படிச் செய்கிறார்கள் என்பதெல்லாம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெரெக் பிஃபாஃப்.. 30 வயதான இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு சில காரணங்களால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும் அதிசயமாக உயிர் பிழைத்தார். இருப்பினும், அவரது முகம் இதில் பாதிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இதனால் அவர் பெரும் அவதியை சந்தித்து வந்தார்.
50 மணி நேரம்: இதற்காக டெரெக்கிற்கு சிறப்பு ஆப்ரேஷன் ஒன்று செய்யப்பட்டுள்ளது. 50 மணி நேரம் நீடித்த இந்த ஆப்ரேஷனை சுமார் 80 மருத்துவர்கள், செவிலியர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் உலகெங்கும் வெகு சிலருக்கு மட்டுமே இந்த முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. அப்படி வெற்றிகரமாக ஆப்ரேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவராக இப்போது டெரெக் இருக்கிறார்.
டெரெக் கடந்த 10 ஆண்டுகளில் 58 மறுசீரமைப்பு முக அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும், அவரால் உணவைச் சாப்பிடவோ அல்லது சாதாரணமாகப் பேசவோ முடியவில்லை. மூக்கு இல்லாமல் போனதால் அவரால் கண்ணாடியையும் கூட அணிய முடியவில்லை. இதன் காரணமாகவே மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பதிலாக முக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
நன்றி: அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது தொடர்பாக டெரெக் கூறுகையில், "இப்போது முகம் அழகாக இருக்கிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த அறுவை சிகிச்சை என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. நான் இப்போது மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறேன். இந்த ஆப்ரேஷன் செய்ய உதவியவர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், "டெரெக்கின் முகத்தை சுமார் 85 சதவீதம் சரி செய்துள்ளோம். நன்கொடை திசுக்களை மாற்றி இருக்கிறோம். மேல் மற்றும் கீழ் இமைகள், மேல் மற்றும் கீழ் தாடைகள், பற்கள், மூக்கு, கன்ன அமைப்பு மற்றும் கழுத்து தோல் ஆகியவை மாற்றியுள்ளோம்" என்று கூறினர்.
பின்னணி: என்ன நடந்தது: டெரெக் நன்கு படிக்கக்கூடிய ஒரு மாணவர். இருப்பினும் கடந்த 2014ம் ஆண்டு 19 வயதில் டெரேக் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். விடுமுறைக்காகக் கல்லூரியில் வீட்டிற்கு வந்திருந்த அவர், துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு இருக்கிறார். எதற்காக இந்த முடிவை எடுத்தார், எப்படி துப்பாக்கியைப் பெற்றார் என்பது குறித்து அவருக்கு எந்தவொரு ஞாபகமும் இல்லை.
ஆனால், தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் உயிர் பிழைத்தாலும் முகம் மொத்தமாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு வெற்றிகரமாக முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications