பக்கவிளைவு இல்லை.. அமெரிக்க நிறுவனத்தின் அசத்தல் கொரோனா தடுப்பூசி.. ஜூலையில் 30,000 பேருக்கு ட்ரையல்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த, மோடெர்னா இன்க் (Moderna) தடுப்பூசி ஆய்வு முடிவுகளில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ட்ரையல்களில் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
Recommended Video
COVID-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா புதிய வைரஸின் நெருங்கிய உறவினர் சார்ஸ் வைரஸ்தான். அதன் கஸின் பிரதர் அல்லது சிஸ்டர் என்று சொல்ல முடியும்.
எனவே, அதை அடிப்படையாக வைத்து தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வில் மோடெர்னா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பக்க விளைவு அச்சம்
இந்த வகை வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள், தடுப்பூசி போடப்பட்ட நபர் பின்னர் நோய்க்கிருமி தாக்க நேரிடும்போது, வேறு சில கடுமையான நோயை ஏற்படுத்தும் பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களிடம் தடுப்பூசிகளை பாதுகாப்பாக பரிசோதிக்கும் முன்பாக, இதுதான் மிகப்பெரிய சவால் என்று விஞ்ஞானிகள் கருதி தயக்கம் காட்டினர்.

மனிதர்களுக்கு பரிசோதனை
மோடர்னாவின் தடுப்பூசி பரிசோதனை தற்போது ஆரோக்கியமான நல்ல திடகாத்திரமான தன்னார்வலர்களிடையே பரிசோதனை நிலையில் உள்ளது. இதுவரை யாருக்கும், எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. எனவே, ஜூலை மாதம் 30,000 பேருக்கு, தடுப்பூசி செலுத்தி நிறைவு கட்ட சோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது மனிதர்கள் மீதான டிரையல் ஜூலையில் துவங்கும் என அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.

எலிகளுக்கு கொரோனா பரவவில்லை
விலங்குகளுக்கான ஆய்வுகளில், எலிகளுக்கு மோடர்னா தடுப்பூசியின் ஒன்று அல்லது இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டன. இதன்பிறகு கொரோனா வைரஸ் எலிகளை அடையும் வகையிலான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், ஏழு வாரங்களுக்கு பிறகும், எலிகளின் நுரையீரலை கொரோனா பாதிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. குறைந்த டோஸ் கொடுக்கப்பட்ட எலிகளுக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை.

நல்லது
"முதல் கட்ட பார்வையில், எலிகளில் ஆன்டிபாடி பாதுகாப்பு கவசத்தை தூண்டுவதில் இது நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது" என்று பேய்லர் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் ஹோடெஸ் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நுரையீரல் மற்றும் மூக்குகளில் உள்ள கொரோனா வைரஸிலிருந்து உடலை பாதுகாக்கும். எந்த பக்க விளைவும் இதுவரை ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்துல்ளது.












Click it and Unblock the Notifications