பேரழிவு ஏவுகணையை சோதித்த அமெரிக்கா.. உலகின் எந்த பகுதியையும் தாக்கும்.. ஈரான் போருக்கு இடையே சம்பவம்
வாஷிங்டன்: உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும் டூம்ஸ்டே ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது அமெரிக்கா.. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் 6வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையை அமெரிக்கா சோதனை செய்திருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலை அமெரிக்கா நீர்மூழ்கி இந்திய பெருங்கடலில் தாக்கி அழித்தது.

மறைமுகமாக உதவும் சீனா
இந்த தாக்குதலில் 83 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா இந்த செயலுக்கு வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் 6-வது நாளாக தீவிரம் அடைந்துள்ளது.
பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணைகள், டிரோன்களை கொண்டு சரமாரியாக அட்டாக் செய்து வருகிறது. போரில் ஈரான் அதி நவீன கிளஸ்டர் குண்டுகளையும் பயன்படுத்துவதால், சீனா மறைமுக உதவி செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.
டூம்ஸ்டே ஏவுகணையை சோதிக்கும் அமெரிக்கா
போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா தனது பேரழிவு ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது. டூம்ஸ்டே ஏவுகணை என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணையை வைத்து உலகின் எந்த மூலையையும் தாக்க முடியும். கடந்த மார்ச் 3-ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள தளத்தில் இருந்து இந்த சொதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட சோதனை எனவும், தற்போதைய சூழலுக்கான பதிலடி நடவடிக்கை இல்லை என்றும் விமானப்படை குளோபல் ஸ்டிரைக் தளபதி கூறியுள்ளார். ஆனாலும் அமெரிக்கா இதனை சோதித்து பார்த்துள்ள கால கட்டம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும்
13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை உலகின் எந்த மூலையையும் தாக்கும் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி கொண்டதாகும்.
இது அமெரிக்காவின் நிலையான சிலோ (silo) தளங்களில் இருந்து ஏவப்படும், நகர்த்த முடியாத (non-mobile), தரை தள அடிப்படையிலான அணு ஆயுத திறன் கொண்ட ஒரே பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications