டென்னிஸ் மேட்ச் பார்க்காம ஏகத்துக்கும் ஏடாகூடமா 'அந்த சேட்டை' செய்த டிரம்ப்-மாடல் அழகி புகார்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அதிரவைக்கும் பாலியல் புகாரை மாடல் அழகி எமி டோரஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தம் மீதான இந்த புகார்கள், களங்கத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என மறுத்திருக்கிறார் டிரம்ப்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் களைகட்டியிருக்கிறது. டொனால் டிரம்ப்- ஜோபிடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அனல் பறக்கும் அமெரிக்கா தேர்தல் களத்தில் சூடாக ஒரு பலான புகார் களமிறக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகார்
அமெரிக்காவின் மாடல் அழகிகளில் ஒருவரான எமி டோரஸ்தான் இந்த அடேங்கப்பா புகாரை தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஏடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டொனால் டிரம்ப் செய்த பாலியல் சேட்டைகளை அந்த மாடல் அழகிரி எமி டோரஸ் பிட்டு பிட்டு வைத்திருக்கிறார்.

டென்னிஸ் மேட்ச்
அப்பேட்டியில் எமி டோரஸ் கூறியிருப்பதாவது: 1997-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. அப்போது எனக்கு 24 வயது. மார்லா மாப்ள்ஸ் என்பவரை டிரம்ப் திருமணம் செய்திருந்த தருணம். டென்னிஸ் மேட்ச் பார்க்க விஐபி கேலரியில் அமர்ந்திருந்தோம்.

பிடியில் இருந்து தப்ப முடியலை
டிரம்ப் விஐபி பாத்ரூமுக்கு வெளியே என்னை படாதபாடு படுத்திவிட்டார். என் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் தொட்டு தொட்டு நீண்டநேரம் முத்தமிட்டார். இதை நான் விரும்பவே இல்லை. அவரது பிடியில் இருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் என்னால் அவரிடம் இருந்து விடுபடவே முடியாத அளவுக்கு இறுக்கமாக அணைத்திருந்தார் என கதறலாக கூறியிருக்கிறார்.

டிரம்ப் மீது புகார் தரும் 26-வது பெண்
அமெரிக்காவில் இப்போது எமி டோரஸ் சொன்ன டிரம்ப்பின் சேட்டைகள்தான் படு ஹாட்டாப்பிக்காக இருக்கிறது. ஆனால் டொனால்ட் டிரம்ப் இந்த பலான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் களங்கம் கற்பிக்கிறார் என புலம்பியிருக்கிறார். ஏற்கனவே டிரம்ப் மீது 25 பெண்கள் பாலியல் புகார் கொடுத்த நிலையில் தற்போது எமி டோரஸ் 26-வது நபராக இணைந்திருக்கிறார்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications