17 ஆண்டுகளுக்கு முன் தாய்.. இப்போது சொந்த மகள்! பலாத்காரம் செய்த கொடூரன்! கோர்டில் இருந்தும் எஸ்கேப்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இப்போது நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டா அபெல்செத். இவர் அங்குள்ள பொன்சடௌலா என்ற சிறு நகரத்தில் வசித்து வருகிறார்.
இவர் தற்போது அங்குள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தில் இவர் இப்போது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் திடுக்கிடச் செய்யும் வகையில் உள்ளது.

17 ஆண்டுகள்
சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2005ஆம் ஆண்டு கிறிஸ்டா அபெல்செத் தனது இரு நண்பர்கள் உடன் கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு தான் அவரது சகோதரரின் நண்பர் வேலை செய்வதால் அங்கு அவர் சென்றுள்ளார். அப்போது அங்கு ஜான் பார்ன்ஸ் என்ற நபர் இருந்துள்ளார். ஜான் பார்ன்ஸ் தன்னை கிறிஸ்டா அபெல்செத்தின் சகோதரரின் நண்பர் என்று கூறி அறிமுகம் ஆகியுள்ளார்.

பலாத்காரம்
உடன் வந்தவர்கள் சீக்கிரம் கிளம்பவே அபெல்செத் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரிடம் வீட்டில் விட்டுவிடுவதாக ஜான் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். சகோதரரின் நண்பர் என்பதால் அபெல்செத்தும் நம்பி அவருடன் காரில் சென்றுள்ளார். இருப்பினும் அபெல்செத் வீட்டில் இறக்கிவிடாமல் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு அபெல்செத்துக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கமடைய வைத்து பாலியல் பலாத்காரமும் செய்துள்ளான்.

புகார் இல்லை
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கிறிஸ்டா அபெல்செத், இதை வெளியே சொன்னால் தனக்கு அவமானம் என்று வெளியே யாரிடமும் சொல்லவில்லை. இந்தச் சம்பவம் நடந்த போது கிறிஸ்டா அபெல்செத்துக்கு வயது 16. மேலும், ஜான் பார்ன்சுக்கு வயது 32. அமெரிக்கச் சட்டத்தின்படி, அனுமதி உடன் உடலுறவு கொள்ளவும் குறைந்தபட்ச வயது 17. அதாவது 17 வயதுக்கு குறைவானவர்கள் உடன் அனுமதி உடன் உடலுறவு கொண்டாலும் அது பலாத்காரமாகவே கருதப்படும். இருந்த போதிலும் அபெல்செத் வெளியே சொல்லாததால் இதில் இருந்து பார்ன்ஸ் தப்பி உள்ளார்.

கர்ப்பம்
இந்த பலாத்கார சம்பவத்தில் அபெல்செத் கர்ப்பமடைந்துள்ளார். பலாத்காரத்தால் கருவுற்று இருந்தாலும் பிள்ளையைப் பெற்றுக் கொள்ள பெல்செத் முடிவு செய்துள்ளார். அதன்படி அபெல்செத்துக்கு மகள் பிறந்துள்ளது. முதல் 5 ஆண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமலேயே சென்றுள்ளது. அந்த சிறு நகரத்தில் இருவரும் பார்த்துக் கொள்ளாமலேயே இருந்துள்ளனர். இருப்பினும், கடந்த 2010இல் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தனது மூலமாகவே அபெல்செத்திற்கு மகள் பிறந்துள்ளது என்பதை ஜான் பார்ன்ஸ் அறிந்து கொண்டுள்ளார்.

சிறுமி
இதையடுத்து பிள்ளை தன்னிடம் வளர வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு குழந்தை இரு தரப்பினரிடம் வளர நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இருவரிடமும் மாறிமாறி குழந்தை வளர்ந்து வந்தது. இந்தச் சூழலில், ஒப்பந்தத்தை மீறி அபெல்செத் மகளுக்கு ஃபோனை கொடுத்ததாகவும் அதை பயன்படுத்தி 17 வயது மகள் அவரது பாய்பிண்ட் உடன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும் ஜான் பார்ன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

வழக்கு
இது தொடர்பாக அவர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து விதிமுறைகளை மீறியதால் ஜான் பார்ன்ஸிடமே குழந்தை முழுவதுமாக வளர வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தது. மேலும், குழந்தையை பராமரிக்கும் செலவை பார்ன்சுக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படியே சில மாதங்கள் சென்ற நிலையில், இப்போது கிறிஸ்டா அபெல்செத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மகளை பலாத்காரம்
அதில் 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி தனக்குப் போதைப்பொருள் கொடுத்து, பார்ன்ஸ் பலாத்காரம் செய்தாரோ அதேபோல இப்போது தங்கள் மகளுக்கும் போதைப்பொருள் கொடுத்து பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்து உள்ளார். தொடர்ச்சியாக இரு நாட்கள் தனது மகளை பலாத்காரம் செய்துள்ளதாகவும் இதனால் தனது மகளை மீண்டும் தன்னிடம் வளர அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டிஸ்மிஸ்
பாலியல் வன்கொடுமையுடன் ஒத்துப்போகும் சில அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை கூட கூறியுள்ளதாக அபெல்செத் தெரிவித்தார். இருப்பினும், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்துவிட்டது. பார்ன்ஸுக்கு உள்ளூர் போலீசாரிடம் நல்ல செல்வாக்கு உள்ளதாகத் தெரிவித்த அபெல்செத் இதனால் விசாரணை கூட நடத்தப்படவில்லை என்று வழக்கு டிஸ்மிஸ் செய்ய இதுவே முக்கிய காரணம் என வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சமூக ஆர்வலர் ஸ்டேசி டிரிச் இந்தச் சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரிடம் எப்படி பெண் குழந்தையை ஒப்படைக்க முடியும். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் யாரிடம் பாதிக்கப்பட்டாரோ அவருக்கே பராமரிப்பு செலவு, சட்ட செலவுகள் வழங்கும் சம்பவத்தை எங்காவது கேள்விப் பட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதில் அபெல்செத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை துணை நிற்பேன் என்று ஸ்டேசி டிரிச் தெரிவித்துள்ளார்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications