"என்னமோ தப்பா நடக்குது!" அதிபயங்கர வேகத்தில் விரிவடையும் பிரபஞ்சம்.. குழம்பி நிற்கும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: நமது அண்டம் விரிவடையும் வேகம் குறித்து நாசா ஆய்வாளர்கள் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கேலக்ஸி எனப்படும் நமது பால்வெளி மண்டலம் பல மர்மங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த பால்வெளி மண்டலத்தைக் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவின் நாசா பிரபஞ்சம் குறித்த ஆய்வை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் பிரபஞ்ச விரிவாக்கம் குறித்து நாசா சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளது.

ஹப்பிள் டெலஸ்கோப்
விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதில் ஹப்பிள் டெலஸ்கோப் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து இந்த ஹப்பிள் டெலஸ்கோப்பில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறது. நமது அண்டம் குறித்த பல மர்மங்களைப் புரிந்துகொள்ளவும் தீர்க்கவும் இந்த டெலஸ்கோப் தான் உதவியுள்ளது. விண்வெளியைச் சுற்றி வரும் இந்த டெலஸ்கோப் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சேவையில் உள்ளது.

அசாதாரணமான நிகழ்வு
இத்தனை ஆண்டுகளில் ஹப்பிள் டெலஸ்கோப் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிகமான சுவாரஸ்யமான நிகழ்வுகளின் புகைப்படங்களை எடுத்துள்ளது. பிரபஞ்சம் எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதைக் கண்டறிவதில் இது முக்கியமாகக் கவனம் செலுத்தி வருகிறது. நமது பிரபஞ்சத்தில் அசாதாரணமான நிகழ்வு ஏதோ நடப்பதாக நாசா கூறுகிறது.

முரண்பாடு
பல ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் விஞ்ஞானிகளால் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை இன்னும் துல்லியமாக ஆய்வு செய்ய முடிகிறது. இருப்பினும், நமது பிரபஞ்ச விரிவாக்கத்தில் ஏதோ முரண்பாடு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நம்மைச் சுற்றி இருக்கும் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் வித்தியாசமாக இருப்பதாகவும், பிரபஞ்சத்தில் விசித்திரமான ஏதோ ஒன்று நடப்பதாகவும் நாசா கூறுகிறது.

டேட்டாக்கள்
இது ஆய்வாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விசித்திரமான நிகழ்வைப் புரிந்து கொள்ள, அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் தொடர்பாக ஹப்பிள் டெலஸ்கோப் சேகரித்த தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது நமது பிரபஞ்சத்தின் விரிவாக்க வீதத்தைக் கண்டறிய உதவும். இந்த தரவுகளை மைல்போஸ்ட் டேட்டா என்று ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். 1990இல் ஹப்பிள் டெலஸ்கோப் செயல்படத் தொடங்கியதில் இருந்து இதுவரை 40க்கும் மேற்பட்ட மைல்போஸ்ட் டேட்டாக்கள் பெறப்பட்டுள்ளது.

வேகம்
ஹப்பிள் டெலஸ்கோப் பயன்பாட்டிற்கு வரும் முன்பு கருத்தியல் ரீதியாக எந்த வேகத்தில் அண்டம் விரிவடைகிறது என்று மதிப்பிடப்பட்டது. அவற்றில் ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 67.5 கிலோமீட்டர் வேகத்தை அண்டம் விரிவடையும் என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், ஹப்பிள் டெலஸ்கோப் வந்ததும் அண்டம் ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 73 கிலோமீட்டர் வேகத்தில் விரிவடைவதை கண்டறிந்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications