ஒதுக்கிவைத்த கோபத்தில் ஈரான்.. 'எங்கயாச்சும் தொட்ட... நீ கெட்ட' படையை அனுப்பி எச்சரிக்கும் அமெரிக்கா
Recommended Video
வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெடிகுண்டுகளை கையாளும் சிறப்பு படையை அனுப்பி உள்ள அமெரிக்கா, தங்களுடைய நாடு மீதோ அல்லது தனது நேச நாடுகள் மீதோ ஏதேனும் தாக்குதல் நடந்தால் அதனை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என ஈரானை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் காணப்படுகிறது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறுகையில், "அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் கேரியர் ஸ்ட்ரைக் குழு, தேசத்திற்கு எதிரான தொந்தரவுகள், அறிகுறிகள், மற்றும் எச்சரிக்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது. ஈரான் நாட்டுடன் அமெரிக்கா போரினை விரும்பவில்லை. அதேநேரம் இஸ்லாமிய புரட்சி படை அல்லது ஈரானிய ராணுவத்தினாரால் எதேனும் தாக்குதல் எங்களை நோக்கி நடத்தப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகவே இருக்கிறோம்" என்றார்.
ஏற்கனவே அமெரிக்கா அதன் நேச நாடுகளிடமும், மற்ற நாடுகளிடமும், மே2ம் தேதிக்கு மேல் யாரும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என கெடு விதித்து தடைவிதித்துள்ளது. மேலும் ஏற்கனவே ஈரானுடன் மற்ற நாடுகள் எந்த வர்த்தக உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என ஒதுக்கிவைத்துள்ளது. மீறி வர்த்தக உறவு மேற்கொண்டால் அந்தநாடுகளும் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. எனவே ஏதேனும் தாக்குதல் அமெரிக்காவுக்கு எதிராக நடத்தப்படலாம் என தகவலின் காரணமாக அமெரிக்கா இவ்வாறு ஈரானை எச்சரித்துள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications