அமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,30,58,079 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14,64,824 ஆகவும் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,36,184 ஆகும். உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவின் பாதிப்பு அதி உச்சத்தில் இருந்து வருகிறது.

அமெரிக்காவில் உச்சம்
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,50,404 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு
அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 819 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,73,072. அமெரிக்காவில் இதுவரை 81,07,203 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் பாதிப்பு
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதற்கு அடுத்ததாக ரஷ்யாவில் 26,683 பேருக்கும் பிரேசிலில் 24,468 பேருக்கும் இத்தாலியில் 20,648 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மரணங்கள்
மேலும் ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 459 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 444 பேரும் இத்தாலியில் 541 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications