ஈரான் மீது இன்று மிகப்பெரிய தாக்குதலுக்கு ரெடியாகும் அமெரிக்கா? டிரம்ப் கருத்தால் எகிறும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இன்று ஞாயிற்றுக்கிழமை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என பேசியுள்ளார். டிரம்ப் இன்று கூறிய இந்த கருத்து மற்றும், இதற்கு நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஈரான் பதிலடி கொடுத்திருப்பது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்திய நிலையில், பதிலடியாக ஈரானும், இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

US preparing for a massive attack on Iran today Tensions soar following Trump remarks

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தற்போது வரை பலன் கிடைக்கவில்லை. இருநாடுகளும் தங்கள் கோரிக்கைகள், நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர மறுப்பதால் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே தீவிர மோதல் கடந்த சில வாரங்களாக இல்லை. இருந்தாலும் தொடர்ந்து பதற்றமே நீடித்து வருகிறது.

இதற்கு மத்தியில் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த போவதாக டிரம்ப் நேற்று எச்சரித்து இருந்தார். இதற்கு நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று ஈரான் பதிலடி கொடுத்தது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டிரம்ப் இன்று கூறிய கருத்து புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க இடைக்கால தேர்தலில் வாக்களித்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிரம்ப் கூறியதாவது:

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. ஒருவேளை நாளையே (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் நடத்தலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், மிகச் சிறந்த, பெரிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அந்த ஒப்பந்தத்தை அவர்கள் கடைப்பிடிப்பார்களா என்பதுதான் பிரச்சினை" என்றார்.

முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஈரான் மீது தாக்குதல் இருக்காது என்று டிரம்ப் கூறியிருந்தார். அதே நேரத்தில் இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க தூதரும் கூறியிருந்தார். துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பாரக் பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இவ்வாறு அவர் கூறியிருந்தார். ஈரான் மீது இன்றே தாக்குதல் நடத்தக்கூடும் என்று டிரம்ப் கூறியிருப்பது வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+