கொரோனாவால் தொடர் காய்ச்சல்.. ஹெலிகாப்டரில் மருத்துவமனை விரைந்த டொனால்ட் ட்ரம்ப்
வாஷிங்டன்: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கும் நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதுபற்றி நேற்று ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அவர் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அதிபர் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் வெளியே சென்றபோது கறுப்பு வண்ண முகக் கவசம் அணிந்திருந்தார். செய்தியாளர்களை நோக்கி கைகளை காட்டியபடி அவர் ஹெலிகாப்டரில் ஏறி பிறகு மருத்துவமனை சென்றடைந்தார்.
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
வீடியோ வெளியிட்ட ட்ரம்ப்
மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, அவர் உடல் நிலை சீராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை அடைந்ததும், டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிக ரிஸ்க்
அதிக உடல் எடை வயது மூப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கக்கூடிய டொனால்ட் ட்ரம்ப்புக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதால் இவர் உயர் ரிஸ்க் பிரிவின் கீழ் வருகிறார். எனவே லேசான அறிகுறிகள் மேலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது.
|
ட்ரம்ப் ட்வீட்
மருத்துவமனையில் ட்ரம்புக்கு ஆன்டிபாடிகளுக்கான ஊசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் ட்ரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டு இருக்கிறது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் நன்றி. அன்புடன். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர்
வெள்ளை மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் வெளியே சென்றபோது கறுப்பு வண்ண முகக் கவசம் அணிந்திருந்தார். செய்தியாளர்களை நோக்கி கைகளை காட்டியபடி அவர் ஹெலிகாப்டரில் ஏறி பிறகு மருத்துவமனை சென்றடைந்தார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications