வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: சிறு வயதில் குழந்தைகளுடன் இணைந்து அப்பார்ட்மெண்ட்டையே வியக்க வைத்தவர் கமலா ஹாரிஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சின்ன வயதிலேயே விளையாட்டு கிரவுண்டுக்காக ழந்தைககுளுடன் சேர்ந்து போராடியவர் என்பதும், மனிதநேயம் உள்ளவர் என்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

    KAMALA HARRIS இப்படி பட்டவங்களா ! | UNTOLD STORY | ONEINDIA TAMIL

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ துணை அதிபர் வேட்பளாராக தமிழக வம்சாவளியான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்து நமது 'ஒன் இந்தியா தமிழ்' தளத்துடன் அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் பிறந்த ஆக்லாந்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கலந்துரையாடினார்.

    அவர் அங்கு நடந்து வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் குறித்தும், சிறுவயது வாழ்க்கை குறித்தும் விரிவாக விவரித்துள்ளார். அவற்றில் சில முக்கிய விஷயங்களை இப்போது பார்ப்போம்.

    சித்தி என அழைத்த கமலா ஹாரீஸ்.. அமெரிக்காவில் ராதிகாவின் சீரியலை டிரென்டாக்கிய தமிழர்கள் சித்தி என அழைத்த கமலா ஹாரீஸ்.. அமெரிக்காவில் ராதிகாவின் சீரியலை டிரென்டாக்கிய தமிழர்கள்

    ஆதரவு எப்படி

    ஆதரவு எப்படி

    கேள்வி: பெண்கள் சார்ந்த விஷயமாக கமலா ஹாரிஸை பற்றி எப்படி பார்க்கிறார்கள். கமலா ஹாரிஸை பற்றி அமெரிக்க பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.

    பதில்: அமெரிக்காவில் நம் நாட்டை ஒப்பிடும் போது எல்லாருமே பெண்கள் விஷயத்தில் நன்றாக மதிப்பார்கள். அமெரிக்காவில் பெண்கள் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறார்கள். ஆனால் யாரும் வென்றது இல்லை. இந்த தேர்தல் கமலா ஹாரிஸ்க்கும் புதியது. இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட வந்திருப்பது என்பது அமெரிக்காவில் மிகப்பெரிய விஷயம். துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு அவர், வழக்கறிஞராக இருந்துள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் அட்டார்னியாக இருந்துள்ளார். கலிபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக இருந்துள்ளார். அவர் நிறைய ரெக்கார்டுகளை முறியடித்துள்ளார். 3வது பெண் துணை அதிபர் வேட்பாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். போராடி தான் இந்த இடத்திற்கு அவர் வந்துள்ளார். நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளார். இங்குள்ள மீடியாக்களும் பெண் என்பதற்காக அவரை விமர்சிப்பது உள்ளது. எல்லா ஊரிலும் இது ஒன்றாகத்ததான் உள்ளது.

    போராளியாக கமலா ஹாரிஸ்

    போராளியாக கமலா ஹாரிஸ்

    கேள்வி: சிறு வயது முதலே போராளியாக இருந்திருக்கிறார் என்றும் விளையாட்டு மைதானம் கேட்டு சிறுவயதிலேயே கமலா ஹாரிஸ் தனது சகோதரியுடன் போராடியதாக சொல்கிறார்களே உண்மையா?

    பதில்: நமக்கு வீட்டில் இருந்து தான் குணங்கள் வருகின்றன. அந்த வகையில் அவருடைய குணாதிசயத்திற்கு அவரது அம்மா தான் காரணம் என்று சொல்கிறார் கமலா ஹாரிஸ். எப்படி என்றால் கமலாவின் தாயார், 19 வயதிலேயே சொந்த முயற்சி எடுத்து அமெரிக்கா வந்திருக்கிறார். தனியாகவே பயணித்துள்ளார். அவரது அம்மா ஷியாமளா கோபாலன், எதையும் குறை சொல்லக்கூடாது. எதையாவது நாம் செய்ய வேண்டும். இனி நடக்க வேண்டிய விஷயத்துக்காக போராட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த குணம் தான் இவர்களுக்கு வந்துள்ளது. கமலா ஹாரிசும் அவரது தங்கை மாயாவும் அப்பார்ட்மெண்ட் காம்பௌக்ஸில் விளையாட இடம் கேட்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள எல்லா அப்பார்ட்மெண்ட் காம்பௌக்ஸிலும் விளையாட இடம் உள்ளது. இவர்ளுக்கு இல்லை என்று நிலத்தின் உரிமையாளர் சொன்ன உடன் பக்கத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் ஒன்று திரட்டி கமலா ஹாரிஸ் போராடி விளையாட இடம் அந்த நாளிலேயே வாங்கிவிட்டார். மிகச்சிறிய வயதிலேயே இதை செய்திருக்கிறார்.

    மனிதநேயம் உள்ளவர்

    மனிதநேயம் உள்ளவர்

    கேள்வி: மக்கள் மத்தியில் கமலா ஹாரிஸ்க்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருக்கிறது?

    பதில்: வாய்ப்புகள் சரிசமமாக இருக்கிறது. பெண் என்பதால் அதிக வாய்ப்பு உள்ளது. ஜோ படைன், கமலா ஹாரிஸ் கூட்டணி பற்றி அதிக விவாதம் போய் கொண்டிருக்கிறது.

    கேள்வி: கமலா ஹாரிஸ் தன்னுடன் பணியாற்றுபவருக்காக மருத்துவமனை வந்து அவர் இறக்கும் நிலையில் அன்பையும் பாசத்தையும் காட்டினார் என்று பேசப்படுகிறது. அதைபற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

    பதில்: அந்த நபர் கமலா ஹாரிஸ் உடன் பிரச்சாரத்தில் பணியாற்றியவர். அவர் கேன்சர் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு சந்தித்த கமலா, அதற்காக நீண்ட நேரம் விமானத்தில் வந்தார். வந்து இறப்பதற்கு முன்பு அவருடன் இருந்த நகைச்சுவையான விஷயங்களை பேசி ஆறுதல் கூறியிருக்கிறார். அவரது மனைவிக்கு நான் உங்களோடு இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியிருக்கிறார். மனிதபாபிமானத்துடன் நடந்து கொண்ட சிறந்த பெண்ணாக பார்த்தார்கள்.

    திருமண வாழ்க்கை

    திருமண வாழ்க்கை

    கேள்வி: கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறார்கள். அதற்கான படங்களும் உள்ளது. அந்த தகவலை கூறுங்கள்

    பதில்: 2014ல் தான் கமலா ஹாரிஸ் திருமணம் செய்தார். அவர் யூத பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். டக்ளஸ் . அவர் இந்திய பாரம்பரியப்படி பூ மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். தமிழ் பாரம்பரியம் அவருக்கு இருக்கிறது. இவரது பட்டபெயர்களில் மமோலா என்று அழைப்பது தான் அவருக்கு பிடிக்குமாம். அவரது குழந்தைகளும் அப்படித்தான் அழைப்பார்களாம்" இவ்வாறு கூறினார். கமலா ஹாரிஸின் சமையல் திறன். அவருடைய கேள்வி கேட்கும் பண்பு உள்ளிட்ட இன்னும் நிறைய சுவாரஸ்யமான பதில்களை வெண்ணிலா நமக்கு அளித்தார். அதை வீடியோவில் பாருங்கள்.

    English summary
    us president election 2020 : Kamala Harris's selection as the Democratic Party's vice-presidential nominee excited Indian Americans. she surprised the apartment with the children at a young age. full story read here. because untold story about kamala harris early life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X