நடிகையுடன் ‛ஜாலி’.. சர்ச்சையை மீறி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடனை முந்தும் டொனால்ட் டிரம்ப்-ஆஹா
வாஷிங்டன்: ஆபாச நடிகையுடன் உல்லாசம் அனுபவித்ததோடு, அதனை மறைக்க தேர்தல் நிதியை செலவழித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றம்சுமர்த்தப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போதைய அதிபர் ஜோபைடனை எதிர்த்து அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்து இருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோபைடன் உள்ளார். அமெரிக்காவை பொறுத்தமட்டில் அதிபர் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகள் தான். கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை வீழ்த்தி ஜோபைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் அதிபராக செயல்பட்டு வருகிறார். ஜோபைடனின் அதிபர் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான ஜோபைடன் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். தற்போது அவருக்கு 80 வயது ஆகும் நிலையில் உடல்நல பிரச்சனையை அவ்வப்போது எதிர்கொண்டாலும் கூட அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தான் முன்னாள் அதிபராக டொனால்ட் டிரம்பும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தேர்தல் பிரசாரங்களை தனது ஆதரவாளர்கள் மூலம் தொடங்கினார். இந்நிலையில் தான் ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் உல்லாசம் அனுபவித்தது, அதனை வெளியே கூறாமல் இருக்க தேர்தல் பிரசார நிதியை வழங்கியது உள்ளிட்ட வழக்கில் பிரச்சனையை எதிர்கொண்டார். இந்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டார். மேலும் பத்திரிகையாளர் ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து வாஷிங்ட்ன போஸ்ட் -ஏபிசி நியூஸ் சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி பிரச்சனையில் சிக்கினாலும் கூட டொனால்ட் டிரம்ப்புக்கான ஆதரவு அதிகமாக உள்ளது. மாறாக தற்போதைய அதிபரான ஜோபைடன் பின்தங்கி 3வது இடத்தில் உள்ளார்.
இந்த கருத்து கணிப்பின்படி ஜோபைடனின் செயல்பாடு நன்றாக இருப்பதாக 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல் மீண்டும் ஜோபைடன் அதிபராக செயல்பட உடல்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மாறாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அதிபர் பதவிக்கு தகுதியானவர்கள் என 64 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தான் அதிபர் பதவிக்கு சரியான நபர் என 54 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் புளோரிடா ஆளுநர் ரோன் டிசாண்டிஸ் என்பவரும் விரைவில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இவரும் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவர் தான். குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்புக்கு பதில் ரோன் டிசாண்டிஸ் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இவரது பெயரை குறிப்பிட்டு கேட்கும்போது கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜோபைடனை ஒப்பிடும்போது இவருக்கு கூடுதலாக 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டிசாண்டிஸ் ஆகியோரை விட தற்போதைய அதிபர் ஜோபைடன் பின்தங்கி உள்ளார். இதன்மூலம் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு வாக்காளர்கள் அளித்த பதிலில் ஜோபைடன் 2வது இடத்தில் உள்ளார். இந்த கேள்விக்கு 44 சதவீதம் பேர் டொனால்ட் டிரம்புக்கு வாக்களிப்பதாக கூறிய நிலையில் 38 சதவீதம் பேர் மட்டும் ஜோபைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக ரோன் டிசாண்டிசுக்கு உறுதியாக வாக்களிப்போம் என 21 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications