வெள்ளை மாளிகையில் இனி இவர்தான் கெத்து.. முக்கிய பதவியில் இந்தியரை நியமித்த ஜோ பைடன்
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் அதிகாரம் மிகுந்த பணிகளின் ஒன்றான அமெரிக்க அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌதம் ராகவனை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இந்தியர்களை நியமிப்பதை ஜோ பைடன் விரும்புகிறார். அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டதில் இருந்து தற்போதைய அதிரடி முடிவு வரை இந்தியர்களை ஜோ பைடன் பெரிதும் விரும்புவதாக அமெரிக்க ஊடகங்கள் ஆருடம் கூறிவருகின்றன.
இந்தியர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருந்த ஹெச்1பி விசாவை முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்த நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் வீசா கட்டுப்பாடுகளை தளர்த்தினார் இது இந்தியர்களிடையே வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியரான கவுதம் ராகவனை அமெரிக்க அமெரிக்க அதிபருக்கான அதிகாரங்கள் அலுவலக தலைவராக நியமித்துள்ளார்.

யார் இந்த கவுதம் ராகவன்?
கவுதம் ராகவன் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் வளர்ந்த கவுதம் ராகவனின் தாய் தந்தையை இந்திவியாவிலேயே பிறந்து வளர்தவகள் ஆவர். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கவுதம் ராகவன் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை மாளிகையில் அதிகாரமிக்க பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்ததக்கது.

வெள்ளை மாளிகையில் முக்கியத்துவம்
டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் சற்றே பின்னடைவைச் சந்தித்தாலும், தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் கவுதம் ராகவனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்ட்டது. கவுதன் ராகவன் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குநராகவும், அதிபரின் தனி துணை உதவியாளராகவும், பணியாற்றி வந்தார். குறிப்பாக ஜோ பைடனின் அறக்கட்டளைக்கு முக்கிய ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையில் நீண்ட அனுபவம்
இந்நிலையில், நீண்ட நெடும் அனுபவம் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ராகவனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக கவுதம் ராகவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பல ஆண்டுகள் தன்னுடன் பனியாற்றிய கவுதம் ராகவனை இந்த முக்கிய பொறுப்பில் நியமித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளது பல அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஊடகங்களை வாய் பிளக்க செய்துள்ளது என்றே கூறலாம்.

வெள்ளை மாளிகை அலுவலக தலைவர்
அமெரிக்க அதிபருக்கான அலுவலக தலைவர் பதவியை வகித்த கேத்தி ரசல், யுனிசெப் அமைப்பின் செயல்பாட்டு இயக்குநராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் ந்த பதவியில் பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்திய வம்சாவளியரான கவுதம் ராகவன் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது யுனிசெப் தலைவர் கேத்தி ரசலுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கவுதம் ராகவனுக்கு உண்டு என்பது குறிப்பிடத்ததக்கது.












Click it and Unblock the Notifications