உலகின் 2 பெரும் தலைகள் இன்று மீட்டிங்.. அமெரிக்க அதிபருடன் - சீன அதிபர் டின்னர்! பிளான் என்ன?
வாஷிங்டன்: உலகின் 2 பெரும் துருவங்களாக திகழ்ந்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று அபெக் உச்சி மாநாட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்கள்.
உலகின் 2 பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் எதிரும் புதிருமான நிலையில் உள்ளன. வெளியுறவு ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இரு நாடுகளிலிடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கே போட்டிபோடும் வகையில் தொழில்நுட்பம், மென்பொருள் உற்பத்தி, வேளாண் உற்பத்தி, எலெக்டிரானிக்ஸ், ஆட்டோமொபைல் என அனைத்து துறைகளிலும் சீனா சிறந்து விளங்கி வருகிறது. சர்வதேச விவகாரங்கள், உக்ரைன் - ரஷியா போர், பாலஸ்தீன் - இஸ்ரேல் போர்களில் இரு நாடுகளும் எதிரெதிர் நிலைபாட்டில் உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அபெக் எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மையம் சார்பில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று அமெரிக்கா புறப்பட்டார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து தனி விமானம் மூலமாக சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அவர் புறப்பட்டு சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஜி ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இன்று இரவு ஏபெக் சார்பில் நடைபெற தொழிலதிபர்கள் உடனான இரவு விருந்தில் இருவரும் பங்கேற்க உள்ளார்கள்.
அப்போது சீன அதிபருடன் அமெரிக்க தொழிலதிபர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்த போட்டி, மோதல் காரணமாக சர்வதேச வர்த்தகத்தில் உள்ள பிரச்சனைகள், சவால்கள், ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள சிக்கல்கள், பொருளாதார மந்த நிலை குறித்து தொழிலதிபர்கள் சீன அதிபரிடம் முறையிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு இரு நாட்டு உறவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இரு நாடுகள் ஒருவர் மீது ஒருவர் விதித்து இருக்கும் பொருளாதார தடைகள், தைவான் பிரச்சனை, சர்வதேச விவகாரங்களில் உள்ள முரண்பாடுகள், வர்த்தக ஒப்பந்தங்கள், சீன உளவு பலூன் சர்ச்சை விவகாரம், ரஷியா - உக்ரைன், பாலஸ்தீன் - இஸ்ரேல் போர்கள் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் அமெரிக்கா, சீனாவின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications