யாரும் எதிர்பார்க்காத விசிட்.. ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் திடீரென ஜோ பைடன் உக்ரைன் பயணம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் தலைகர் கீவ் நகரில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜோ பைடன் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடங்கி ஓராண்டு கிட்டதட்ட நெருங்கிவிட்டது. இருந்தாலும் ரஷ்யா நினைத்தது போல உக்ரைனை அவ்வளவு எளிதில் ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் உக்ரைன் படைகளும் ரஷ்யாவிற்கு கடுமையான பதிலடி கொடுத்தது.

உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள், நிதி உதவிகளை தொடர்ந்து செய்து வருவது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் அவ்வப்போது குண்டு மழை பொழிந்தாலும் உக்ரைன் படைகளும் தக்க பதிலடியை கொடுத்து ரஷ்யாவிற்கு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் சர்வதெச அளவில் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கும் வித்திட்டுள்ளது.

உக்ரைன் சென்றார் ஜோ பைடன்

உக்ரைன் சென்றார் ஜோ பைடன்

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே உக்ரைன் பக்கம் நிற்கும் அமெரிக்கா, உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. அதேபோல், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது. இப்படி பல்வேறு வழிகளில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்று வரும் நிலையில், இன்று அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் தலைகர் கீவ் நகரில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜோ பைடன் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கீவ் நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு

கீவ் நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த ஜோ பைடன் போலந்து செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், திடீர் பயணமாக உக்ரைன் சென்று இருக்கிறார். ஜோ பைடன் வருகை காரணமாக அமெரிக்க வான்படைகளும் கீவ் நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு அந்த நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்வது இதுவே முதல் முறையாகும். ஜோ பைடன் வருகை தருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கீவ் நகரம் முழுவதும் ஏர் ரெய்டு சைரன்கள் ஒலித்தன. ஜோ பைடன் வருகை தந்ததும் அவரை ஜெலன்ஸ்கி வரவேற்றார். இருவரும் பேசியபடியே நடந்து சென்றனர்.

மேலும் நிதி அளிக்கப்படும்

மேலும் நிதி அளிக்கப்படும்

சாலையில் ஜோ பைடனும் ஜெலன்ஸ்கியும் நடந்து செல்ல இரு பக்கமும் ராணுவ வீரர்கள் வரிசையாக பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இரு தலைவர்களும் ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, உக்ரைனுக்கு மேலும் நிதி உதவி அளிக்கப்படும் என்று ஜோ பைடன் உறுதி அளித்தார். ஜோ பைடனின் உக்ரைன் வருகை அவர் இந்த நாட்டிற்கு அளிக்கும் ஆதரவின் முக்கிய அடையாளமாக உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யாவிற்கு ஆயுத உதவி செய்ய சீனா தயராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்ததது. இதற்கு சீனா கடுமையாக பதிலடி கொடுத்து இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் பயணம் செய்து இருப்பது சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+