உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு மேலும் சிக்கல்.. எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை.. ஜோ பைடன் அதிரடி..!
வாஷிங்டன் : உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
போர் காரணமாக உக்ரைன் நாட்டை விட்டு ஏராளமானோர் வெளியேறி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியானது வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உக்ரைன் மீது தாக்குதல்
தாக்குதலை நிறுத்த கோரி பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில் ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலமுனை தாக்குதலை தொடங்கி உள்ளன. உக்ரைனின் சிறு நகரங்களைக் கைப்பற்ற தொடங்கியுள்ள நிலையில், பெரிய நகரங்களை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

பொருளாதாரம் வீழ்ச்சி
இதனால் அந்த நாட்டின் பணமதிப்பு 30 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல அந்நாட்டின் பங்கு சந்தைகளும் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டன. ஏற்கனவே கடும் விலைவாசி பிரச்சினையில் சிக்கித் தவித்து வரும் ரஷ்யாவில் பணமதிப்பு வீழ்ச்சி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது. ரஷ்ய விமானங்கள் போக்குவரத்தையும் அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்ற நாடுகள் தடை செய்துள்ளன.

படையெடுப்புக்கு பதிலடி
இந்நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஷ்ய பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பெரிய பொருளாதாரத் தடையாக பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதி
தற்போதைய சூழலில் அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 7,00,000 பேரல்கள் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் மிக முக்கியமான பொருளாதார தடைகளை அமெரிக்கா அமல்படுத்தியுள்ள நிலையில், மேலும் இது ரஷியாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும் இந்த தடையில் ரஷ்யாவின் எரிவாயு, எண்ணெய் மற்றும் எரிசக்தி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications