”அதிக ஆபத்து”.. சில நாட்களில் ரஷ்யா போர் தொடுக்கும்.. உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
வாஷிங்டன் : உக்ரைன் மீது ரஷ்யா சில நாட்களுக்குள் படையெடுப்பதற்கு மிக அதிக ஆபத்து இருப்பதாக என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல்போக்கு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் போர் பதற்றம் கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது.
எல்லைப் பகுதிகளில் படைகளை நிறுத்தி உள்ள ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் பதற்றம்
போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்கப்போவதில்லை என ரஷ்யா கூறி வருகிறது. இருந்தாலும் எல்லைகளில் தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருவதால் போர் பதட்டம் தணியவில்லை. இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த ராணுவத்தின் ஒரு பகுதியினர் உக்ரைன் எல்லையில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டு உள்ளனர் என ரஷ்யா கூறியது.

படைகள் குவிப்பு
ஆனால் அதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை என நேட்டோ தெரிவித்துள்ளது. மேலும் படை வீரர்களை திருப்பி அனுப்புவதாக கூறி விட்டு மேலும் படைகளை குவித்து வருவதாக தவறாக வழி நடத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 7,000 வீரர்கள் 48 மணி நேரத்திற்குள் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சமாதானம் என்று வெளியில் கூறிவிட்டு படைகளை எல்லையில் குவிப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதற்கு கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளது.

போர் ஆபத்து
உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ கூட்டணி நாடுகள் சார்பாக கிழக்கு ஐரோப்பவுக்கு துருப்புகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ரஷ்யாவின் அச்சுறுத்தலை தடுப்பதற்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.ரஷ்யா போர் புரியாது எனக் கூறினாலும் உக்ரைன் மீது அந்நாடு சில நாட்களில் போர் தொடுக்கும் அதிக ஆபத்து நீடிப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.

அதிபர் ஜோ பைடன்
இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீதான அச்சுறுத்தல் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசும் திட்டம் இல்லை எனவும், உக்ரைன் மக்கள் ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் அழுத்தத்தை பெற்று வருவதாகவும், 7000 துருப்புகளை எல்லைகளுக்கு அருகில் குவித்துள்ளதாக கூறினார். சில நாட்களுக்குள் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் அபாயம் மிக அதிகம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications