Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் ஏவுகணையை சுட்டு வீழ்த்துங்கள்.. ஜோ பைடன் போட்ட உத்தரவு.. இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க படை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கோபமடைந்துள்ளார். அதுமட்டுமின்றி இஸ்ரேலை பாதுகாக்கும் வகையில் ஈரான் ஏவும் ஏவுகணை சுட்டு வீழ்த்த அமெரிக்க படைகளுக்கு அதிபர் ஜோ பைடன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது அந்த நாட்டுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. ஹிஸ்புல்லா என்பவர்கள் ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

israel iran america

காசா மீதான போரை ஈரான் நிறுத்த கூறியும் இஸ்ரேல் அதை கேட்கவில்லை. இதனால் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவை வைத்து ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியது. பேஜர் தாக்குதல், வாக்கி டாக்கி தாக்குதலை தொடர்ந்து வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் ஹிஸ்புல்லாக்களின் படை தளபதிகள் வரிசையாக கொல்ப்பட்டனர். குறிப்பாக ஹிஸ்புல்லாவின் தலைமை தளபதி ஹசன் நஸ்ருல்லாவும் கொல்லப்பட்டுள்ளார். இதனால் தலைமை இல்லாத படையாக ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.

இதனால் கடும் கோமடைந்துள்ள ஈரான், இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. இன்று இரவு ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதனால் ஏவுகணை தாக்குதலை குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் அலறி வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஈரானின் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ள நிலையில் அதுதொடர்பான சேதம் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.

குறிப்பாக ஈரானின் பல ஏவுகணைகளை இஸ்ரேல் தனது தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் ‛அயன் டோம்' கொண்டு அழித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கோபமடைந்துள்ளார்.அதுமட்டுமின்றி இஸ்ரேலை பாதுகாக்கும் வகையில் அமெரிக்க படைகளுக்கு ஜோ பைடன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அதாவது இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அதுபற்றி ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் சீன் சாவேட் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை செய்தது. அதில், ‛‛அடுத்த 12 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். இதற்கு முழுவீச்சில் ஈரான் தயாராகி வருகிறது. ஈரான் இந்த தாக்குதலை நடத்தும் பட்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடும். இதனால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்'' என எச்சரிக்கை செய்தது.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இஸ்ரேல் அலர்ட்டான நிலையில் ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நல்ல உறவு என்பது இல்லை. மேலும் காசா - லெபனான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் அமெரிக்காவின் வார்னிங்கையும் மீறி ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் அதனை சுட்டு வீழ்த்தி இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் இஸ்ரேலுக்கு மோதல் வலுத்த நிலையில் தான் மத்திய கிழக்கு அமெரிக்கா தனது படைப்பலத்தை அதிகரித்து. விமான தாங்கி போர்க்கப்பல், போர் விமானங்கள் மட்டுமின்றி சுமார் 50 ஆயிரம் படை வீரர்களை அமெரிக்கா மத்திய கிழக்கில் நிலை நிறுத்தி உள்ளது. தற்போது ஜோ பைடனின் இந்த உத்தரவால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் தொற்றியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+