அதானி மீது வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்த சட்டம் அமெரிக்காவில் நிறுத்தி வைப்பு: டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொழிலதிபர் கவுதம் அதானி மீது வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்த FCPA சட்டத்தை நிறுத்திவைக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தால் அமெரிக்க தொழில்களுக்கே பாதகம் ஏற்படுவதாக கூறியுள்ள டிரம்ப், புதிய சட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி மீது அமெரிக்காவில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், அதானி குழுமம் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதாவது, இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் இந்த தகவல்களை மறைத்து அமெரிக்காவில் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடு திரட்டியதாகவும் அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அதானிக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. மேலும் விளக்க அளிக்க வேண்டும் என்று சம்மனும் அனுப்பியது. அதானி நிறுவனம் மீது அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பெரும் புயலையும் கிளப்பியது. இந்த நிலையில் தான், கவுதம் அதானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய காரணமாக இருந்த வெளிநாட்டு ஊழல் செயல்பாடுகள் சட்டம்(FCPA) த்தை நிறுத்தி வைக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதற்கான நிறைவேற்று உத்தரவில் டிரம்ப் கையெழுத்து இட்டுள்ளார். இந்த சட்டத்தில் கையெழுத்திடும் போது டிரம்ப் கூறியதாவது:- இந்த சட்டம் சர்வதேச அளவில் நிறுவனங்களுக்கு பாதகங்களை ஏற்படுத்துகிறது. இந்த சட்டத்தால் அமெரிக்கர்களுடன் யாருமே தொழில் செய்ய விரும்புவது இல்லை" என்றும் டிரம்ப் கூறியுள்ளர்.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி குற்றமாக்கும் எப்சிபிஏ சட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும் புதிதாக நியமனம் செய்யபட்ட அட்டான்ர்னி ஜெனரல் பாம் போண்டிக்கு டிரம்ப் உத்தரவிட்டு இருக்கிறார். ஜிம்மி கார்டர் கருத்துப்படி, எப்சிபிஏ சட்டம் அருமையானதாக தெரிந்தாலும், மோசாமான ஒன்றும் கூட.. அமெரிக்காவிற்கே இது பாதகாமாக உள்ளது. அமெரிக்கர்களுடன் பிசினஸ் செய்ய யாரும் விரும்பாததால் பல ஒப்பந்தங்கள் மெற்கொள்ள முடிவது இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அதானி மீது வழக்குப்பதிவு
இந்தியா மட்டும் இன்றி உலகின் பல்வேறு நாடுகளில் தொழில் செய்து வரும் அதானி. சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்காவில் முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடுகளை பெற்றதாகவும் இது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது என்பதால், அமெரிக்காவின் பங்கு பரிவர்த்தனை ஆணையம் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இத்தகைய சூழலிதான், மேற்கண்ட சட்டத்தை நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications