டிரம்ப் vs கமலா.. கடைசிக்கட்ட சர்வே சொல்வது என்ன? அதிபர் தேர்தலில் காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், கடைசிக்கட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து நாம் நாம் பார்க்கலாம். இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், யார் வெல்வார்கள் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரம் கடைசிக்கட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

us presidential election 2024 kamala harris donald trump 2024

தேர்தல் நேரம் என்பது மாகாணத்தைப் பொறுத்து மாறும். இந்திய நேரப்படி மதியத்திற்கு மேல் தான் அங்குப் பல மாகாணங்களில் தேர்தல் நடைபெறும். இதற்கிடையே தேர்தலுக்கு சில மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், அங்கு வெளியாகியுள்ள கடைசிக்கட்ட சர்வே குறித்து நாம் பார்க்கலாம்.

புது சர்வே: 270டூவின் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 48.4% ஆதரவு இருக்கிறது. மறுபுறம் டிரம்பிற்கு 47.2% ஆதரவு இருக்கிறது. 538 என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 48% ஆதரவுள்ள நிலையில், டிரம்பிற்கு 46.8% ஆதரவு இருக்கிறது. குக் போலிடிக்கர் ரிப்போர்ட் நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 48.6% ஆதரவும் டிரம்பிற்கு 47.9% ஆதரவும் இருக்கிறது.

மேலும், தி ஹில் நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 48.4% ஆதரவுள்ள நிலையில், டிரம்பிற்கு 48.3% ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ரேஸ் டூ வின் டபள்யூ.ஹெச் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸ் 49.1% ஆதரவும் டிரம்பிற்கு 47.8% ஆதரவும் இருக்கிறது. சில்வர் புல்லட் நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 48.5% ஆதரவும், டிரம்பிற்கு 47.8% ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கமலா லீட்: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடும் போட்டி இருந்தாலும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு சற்று அதிகம் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை வாக்குகள் அதிகம் பெற்றால் மட்டும் போதாது, எலக்டோரல் வாக்குகள் அதிகம் பெற வேண்டும். அதாவது ஒட்டுமொத்தமாக யார் அதிக வாக்குகள் என்பதைத் தாண்டி.. அதிக எலக்டோரல் வாக்குகள் உள்ள மாகாணங்களை அதிகம் யார் கைப்பற்றுகிறார்கள் என்பதே முக்கியம். இதனால் அங்கு ஸ்விக் ஸ்டேட்ஸ்கள் முக்கியமானதாக மாறுகிறது.

இதுதான் ட்விஸ்ட்: அதாவது அமெரிக்காவைப் பொறுத்தவரை ப்ளூ ஸ்டேட், ரெட் ஸ்டேட், ஸ்விங் ஸ்டேட் என்று 3 வகையாக மாகாணங்களைப் பிரிப்பார்கள். ப்ளூ ஸ்டேட்ஸ் எப்போதும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவே இருக்கும்.. ரெட் ஸ்டேட்ஸ் என்பது குடியரசு கட்சியையே எப்போதும் வெல்ல வைக்கும். ஆனால், ஸ்விங் ஸ்டேட் எனப்படும் இழுபறி மாகாணங்களில் இரு கட்சிகளும் மாறி மாறியே வென்றுள்ளனர். இதனால் இந்த ஸ்விங் ஸ்டேட்ஸ்களில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதிபர் யார் என்பது முடிவாகும்.

பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, மிச்சிகன், நெவாடா, ஜார்ஜியா, விஸ்கான்சின், அரிசோனா ஆகிய மாகாணங்கள் ஸ்விக் ஸ்டேட்ஸ்களாக உள்ளன. இதில் பென்சில்வேனியாவில் இருவருக்கும் ஒரே அளவுக்கு 48% ஆதரவு இருக்கிறது. மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸுக்கு 1% அதிக ஆதரவு இருக்கிறது. அதேநேரம் வடக்கு கரோலினா, நெவாடா, ஜார்ஜியா, அரிசோனா ஆகிய 4 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். இதனால் அதிபர் தேர்தலில் வெல்லும் சூழல் உருவாகியுள்ளது.

என்ன நடக்க வாய்ப்பு இருக்கு: கமலா ஹாரிஸ் அதிக வாக்குகளைப் பெற்றாலும் போதிய எலக்டோரல் வாக்குகள் பெற முடியாமல் போகலாம். இப்படி எல்லாம் நடந்து இருக்கிறதா எனக் கேட்டால்.. ஆம் கடந்த காலங்களில் சில முறை இப்படி நடந்துள்ளது.

கடந்த 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் கூட டிரம்பை காட்டிலும் ஹிலாரி கிளிண்டன் சுமார் 28 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். ஆனாலும், அதிக மாகாணங்களில் வென்றதால் டிரம்பிற்கு 304 எலக்டோரல் வாக்குகள் கிடைத்தன. ஹிலாரிக்கு 227 எலக்டோரல் வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தற்போதுள்ள நிலையை வைத்து பார்க்கும் போது மீண்டும் இதேபோன்ற நிகழ்வு ஏற்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+