‛ஐ எம் பேக்’.. டொனால்ட் ட்ரம்புக்கான 2 ஆண்டு தடை நீங்கியது.. பேஸ்புக், யூடியூப்பில் ‛மாஸ் என்ட்ரி’

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020ல் நடந்தபோது அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்பை, தற்போதைய அதிபர் ஜோபைடன் வீழ்த்தினார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்விக்கு பிறகு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவரது சமூக வலைதள பக்கங்கள் 2 ஆண்டுகள் வரை முடக்கப்பட்ட நிலையில் தற்போது தடை நீங்கி உள்ளது. இதன்மூலம் ‛ஐ எம் பேக்' என என்ட்ரி கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை செயல்பட்டவர் டொனால்ட் ட்ரம்ப். அவரது பதவிக்காலம் முடியும் நிலையில் கடந்த 2020ல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்பும், தற்போதைய அதிபர் ஜோபைடனும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஜோபைடன் வெற்றி பெற்று அதிபரானார். இந்நிலையில் தான் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் தான் தேர்தலில் தோற்றதாக டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

வன்முறையை தூண்டியதாக...

வன்முறையை தூண்டியதாக...

மேலும் அவர் தனது தோல்வியை ஏற்க மறுத்ததோடு ஆதரவாளர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். மேலும் இதுதொடர்பான வீடியோ உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் அவர் பதிவிட்டார். பல நேரங்களில் தனது பேச்சை நேரலையும் செய்தார். இதையடுத்து டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்

சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்

இந்நிலையில் தான் வன்முறையை தூண்டியதாக டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதைடுத்து அவரது சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன. அதன்படி பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களில் 2 ஆண்டுகள் வரை முடக்கப்பட்டு இருந்தது.

2 ஆண்டுக்கு பின் நீங்கிய தடை

2 ஆண்டுக்கு பின் நீங்கிய தடை


இதையடுத்து டொனால்ட் ட்ரம்ப் மக்களிடம் தொடர்பில் இருக்கும் வகையில் சொந்தமாக ‛ட்ரூத் சோசியல்' என்ற வலைதள பக்கத்தை உருவாக்கினார். இதன்மூலம் அவர் மக்களிடம் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு விதித்த தடையை நீக்கினார். இதன் தொடர்ச்சியாக தற்போது பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் டொனால்ட் ட்ரம்ப் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் ‛‛மாஸ் என்ட்ரி’’

ட்ரம்ப் ‛‛மாஸ் என்ட்ரி’’


இதுபற்றி டொனால்ட் ட்ரம்ப் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛திரும்ப வந்துவிட்டேன் (ஐ எம் பேக்)'' எனக்கூறி மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜோபைடனின் 4 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வருவதால் தான் இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தான் தற்போதைய தடை நீக்கம் டொனால்ட் ட்ரம்புக்கு பிளஸ் பாயிண்டாக அமைய உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+