"40% நாட்கள் லீவ்.." அமெரிக்காவே பற்றி எரியும் போது தூங்கி கொண்டிருந்த பைடன்.. கிளம்பியது சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக நிறைவடைகிறது. அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்வு செய்ய விரைவில் தேர்தலைச் சந்திக்கும் நிலையில், பைடன் தனது பதவிக் காலத்தில் எத்தனை நாட்கள் லீவ் எடுத்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

us presidential election 2024 joe biden donald trump 2024

விடுமுறை: கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் சில மாதங்களில் முடியும் நிலையில் அவர் எத்தனை காலம் விடுமுறை எடுத்துக் கொண்டார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் தேசியக் குழு இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

அதில் 81 வயதான பைடன் கடந்த நான்கு ஆண்டுகளில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளாராம். அதாவது அவர் பதவியில் இருந்த காலத்தில் சுமார் 40 சதவிகித காலத்தை அவர் விடுமுறையில் கழித்துள்ளார். அதாவது அமெரிக்காவில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு 50 ஆண்டுகளில் எத்தனை லீவ் கிடைக்குமோ.. அதை விட அதிக நாட்கள் பைடன் விடுமுறையாக எடுத்துள்ளார்.

5 தலைமுறைக்கான விடுமுறை: அமெரிக்காவைப் பொறுத்தவரைச் சராசரி ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 11 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சராசரி அமெரிக்கர் 48 ஆண்டுகள் வேலை செய்தால் கிடைக்கும் விடுமுறையை பைடன் கடந்த 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார்.

பைடன் இத்தனை நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். உலகளாவிய நிச்சயமற்ற சூழல், உள்நாட்டில் பல்வேறு சவால்கள் நிலவி வரும் சூழலில், அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பது சரியானது இல்லை என்பதே அவர்கள் விமர்சனமாகும்.

கடும் விமர்சனம்: இது குறித்து டிரம்ப் ஆதரவாளர் மார்க் பாலெட்டா கூறுகையில், "இந்த ஒரு டேட்டா போதும் பைடன் எப்படி நம்மை ஆட்சி செய்தார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமே பற்றி எரியும் போது பைடன் எதையும் கண்டு கொள்ளாமல் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதுதான் பைடன் நமக்குக் கொடுத்த ஆட்சி" என்றார்.

பணவீக்கம், எல்லைப் பாதுகாப்பு, சர்வதேச மோதல் என்று பல்வேறு பிரச்சினைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்திலும் பெரியளவில் கவனம் செலுத்த டிரம்ப் தவறிவிட்டதாகவும் சாடுகின்றனர்.

பைடன் ஆதரவாளர்கள்: அதேநேரம் பைடன் தரப்பு ஆதரவாளர்கள் இதற்கு நேர்மாறான கருத்துகளையே கூறியுள்ளனர். அதாவது பைடன் அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலும் தனது இருப்பிடத்தில் இருந்தே பணிபுரிவதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும், விடுமுறையில் இருந்தாலும் கூட முக்கியமான தொடர்ச்சியாக வீடியோ கால் மூலம் கூட்டங்களை நடத்தி தேவையான ஆலோசனைகளை வழங்குவதாகவும் பைடன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த கால தகவல்களை வைத்து பார்க்கும் போது தனக்கு முன்பு அதிபர் பொறுப்பில் இருந்தவர்களை காட்டிலும் பைடன் அதிக நாட்கள் லீவ் எடுத்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் 26 சதவீத நாட்களை விடுமுறையாக எடுத்துள்ளார். முன்னாள் அதிபர்கள் ரொனால்ட் ரீகன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் வெறும் 11 சதவிகிதம் மட்டுமே விடுமுறை எடுத்திருந்தனர். ஜிம்மி கார்ட்டர் தனது பதவிக் காலத்தில் வெறும் 79 நாட்கள் மட்டுமே விடுமுறையாக எடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+