வார்த்தையை விட்ட டிரம்ப்.. "இனவெறி" கருத்து.. கொந்தளித்த அமெரிக்கா.. கமலா ஹாரிஸ் சுளீர் பதிலடி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் கூறிய இன ரீதியான கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்துள்ளார். அங்குப் பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் டிரம்ப் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

சர்ச்சை கருத்து: இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது. அதேநேரம் கமலா ஹாரிஸ் குறித்து இன ரீதியான கருத்துகளை டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதாவது கமலா ஹாரிஸ் இத்தனை காலம் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றே கூறி வந்ததாகவும் இப்போது திடீரென தேர்தல் நெருங்கும் போது கறுப்பினத்தவராக மாறிவிட்டதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
கமலா ஹாரிஸ்: இது தொடர்பாக அவர் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, "அவர் எப்போதும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகவே இருந்தார். கடந்த காலங்களிலும் கூட அவர் தனது இந்தியப் பாரம்பரியம் குறித்தே பேசி வந்துள்ளார். சொல்லப் போனால் அவர் கறுப்பினத்தவர் என்பது அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கும் வரை தெரியாது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த உடன் தன்னை கறுப்பினத்தவர் எனச் சொல்லிக் கொள்வதில் என்ன நியாயம்.. அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவரா இல்லை இந்தியரா? இதில் அவர் விளக்கம் தர வேண்டும்" என்று பேசியிருந்தார்.
டிரம்பின் இந்தக் கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. டிரம்ப் இனவெறி கருத்துகளைச் சொல்லி கமலா ஹாரிஸை வீழ்த்த முயல்வதாகப் பலரும் சாடினர். டிரம்பின் இந்த விமர்சனம் குறித்து கமலா ஹாரிஸ் இதுவரை நேரடியாக எந்தவொரு பதிலையும் அளிக்காமல் இருந்தார். இதற்கிடையே இது தொடர்பாக முதல்முறையாகக் கமலா ஹாரிஸ் விளக்கமளித்துள்ளார்.
பதிலடி: தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பான கேள்விக்குக் கமலா ஹாரிஸ் காட்டமான பதிலை அளித்துள்ளார். சிஎன்என் செய்தி நிறுவனத்தில் டிரம்ப் குறித்த கேள்விக்குக் கமலா ஹாரிஸ், "இது டிரம்பின் அதே பழைய பிளேபுக்... இதுபோல சொல்வதை அவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார்" என்று மட்டும் முடித்துக் கொண்டார். மேலும், இது குறித்து கூடுதலாக எந்தவொரு விளக்கத்தையும் தராமல் "அடுத்த கேள்வி.." என்று நகர்ந்துவிட்டார்.
அமெரிக்காவில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற சாதனையைக் கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். மேலும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற வரலாற்றையும் படைத்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் இந்த சர்ச்சை கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகிறார்.
கமலா ஹாரிஸ் பெற்றோர்: கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அதேநேரம் அவரது தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். இருவரும் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த நிலையில், அங்கு இருவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications