முட்டிமோதும் டிரம்ப்.. அடித்து நொறுக்கும் கமலா ஹாரிஸ்.. கடைசி நேரத்தில் நடக்கும் பரபர மாற்றங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு பெரிய லீட் கிடைத்துள்ளது. இந்த லீட்டை அவர் தக்கவைத்துக் கொண்டால் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெல்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.

சர்வே: இதற்கிடையே இப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கும் வித்தியாசம் குறைவு தான் என்ற போதிலும் இது தொடர்ந்து ஜனநாயக கட்சிக்குச் சாதகமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸ் 4% முன்னிலையில் இருக்கிறார்.
இன்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக வந்துள்ள இந்த சர்வே முடிவுகள் ஜனநாயக கட்சியினருக்கு உற்சாகம் தருவதாக இருக்கிறது. இன்று தொடங்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு வரும் ஆக. 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோவில் நடக்கும் இந்த தேசிய மாநாட்டில் தான் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட இருக்கிறார்.
ஆதரவு: இப்போது வந்துள்ள இந்த சர்வேயில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 49%ஆக இருக்கிறது. அதேநேரம் டிரம்பின் ஆதரவு 45%ஆக இருக்கிறது. கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருந்தால் கூட இரு தரப்பிற்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. பைடன் இருந்த வரை மாற்றுக் கட்சியை நோக்கிச் சென்றவர்கள் இப்போது மீண்டும் ஜனநாயக கட்சியை நோக்கி வருவதையே இது காட்டுகிறது.
முன்னதாக ஜூலை மாதம் நடத்தப்பட்ட சர்வேயில் டிரம்ப் 43% ஆதரவுடன் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது பைடனுக்கு 42% ஆதரவும், மாற்றுக் கட்சியினருக்கு 9% ஆதரவும் இருந்தது. இப்போது டிரம்பின் ஆதரவு அதிகரித்துள்ள போதிலும், மாற்றுக் கட்சியினருக்கான ஆதரவு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருந்தாலும் போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஸ்விங் மாகாணங்கள்: குறிப்பாக மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின், வட கரோலினா, ஜார்ஜியா, அரிசோனா மற்றும் நெவாடா ஆகிய ஏழு மாகாணங்களில் போட்டி கடுமையாக இருக்கிறது. இந்த ஏழு மாகாணங்களில் யார் வெல்கிறார்களோ.. அவர்களே அதிபர் தேர்தலில் வெல்லும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாகாணங்களில் கிட்டத்தட்ட அனைத்திலும் கமலா ஹாரிஸ் தான் இப்போது முன்னிலையில் இருக்கிறார்.
முன்பு ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிட இருந்தது. அப்போது பைடன்- டிரம்ப் இடையே விவாதம் நடந்த நிலையில், அதில் பைடன் செயல்பாடு மிக மோசமாக இருந்தது. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதையடுத்து பலரும் பைடன் ரேஸில் இருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த மாதம் இறுதியில் அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
வெற்றி உறுதி போலயே: அதன் பின்னரே கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் சீனுக்குள் வந்த பிறகு ஜனநாயக கட்சிக்கான ஆதரவு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது வரை கமலா ஹாரிஸ் தான் முன்னிலையில் இருக்கும் நிலையில், இதே டிரெண்ட் தொடர்ந்தால் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெல்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications