வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை வீழ்த்துமா கொரோனா வைரஸ்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்-க்கு எதிரான பிரதான அஸ்திரமாக இருப்பதே கொரோனா வைரஸ் விவகாரம்.

அமெரிக்க தேர்தலில் மீண்டும் வெல்லும் முனைப்பில் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப் இருக்கிறார். ஆனால் அவரை எதிர்க்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கொரோனா விவகாரத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்தார்.

இதேபோல் அமெரிக்கா தேர்தல் தொடர்பான எழுதித் தீர்க்கப்பட்ட கட்டுரைகள் அனைத்திலும் கொரோனா விவகாரம் பிரதான இடத்தில் இருந்தது. ஏனெனில் உலகிலேயே பணக்கார நாடு, எல்லா வசதிகளும் கொண்ட நாடு என்கிற முகத்தைக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

அந்த அமெரிக்காதான் உலகிலேயே மிக மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேசமும் கூட. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 95,67,543. அமெரிக்காவில் இதுவரை 2,36,997 பேர் கொரோனாவால் காவு கொள்ளப்பட்டிருக்கின்றனர். தற்போதும் கூட 31,59,144 பேர் அமெரிக்காவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் பேரழிவு

அமெரிக்காவில் பேரழிவு

32 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட அமெரிக்காவுக்கு மிக மிக உச்சகட்ட பேரழிவுதான் கொரோனா. இந்த ஆட்கொல்லி கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உண்மையிலேயே டிரம்ப் நிர்வாகம் படுபயங்கரமான தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதனைத்தான் அத்தனை ஊடகங்களும் விமர்சகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடரும் பாதிப்பு

தொடரும் பாதிப்பு

135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெறும் 5,41,363. இந்தியாவில் இப்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வரத் தொடங்கி இருக்கிறது என சொல்லலாம். ஆனால் ஒவ்வொருநாளும் 1 லட்சத்தைத் தொடும் அளவில்தான் இன்னமும் அமெரிக்காவின் கொரோனா பாதிப்புகள் இருக்கின்றன.

நாசமான பொருளாதாரம்

நாசமான பொருளாதாரம்

கொரோனாவால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய பேரழிவுக்கு முதல் காரணமே டிரம்ப் நிர்வாகம்தான். கொரொனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தொடக்கத்திலேயே கையில் எடுக்காமல் விட்டுவிட்டதால் கொத்து கொத்தாக அமெரிக்கர்கள் செத்து மடியும் பேரவலம் ஏற்பட்டது.

தோற்கடிக்கும் கொசு?

தோற்கடிக்கும் கொசு?

உலகையே அச்சுறுத்துகிற மிரட்டுகிற அமெரிக்கா, ஒரு வைரஸ் கிருமியிடம் பெருந்தோல்வியை சந்தித்து மண்டியிட்டுக் கிடக்கிறது. உலக நாடுகளையே மிரட்டுகிற 'அமே'ரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவினால் ஆப்ட்ரால் அந்த ஒரு கொரோனா வைரஸ்தான் காரணமாகவும் இருக்கும்

English summary
Accroding to the Media Reports that the Coronavirus may defeats Donald Trump in the US Presidential Poll 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X