அத்தனையும் ஆபாசம்! முன்னால் ஒரு பெண், பின்னால் ஒரு பெண்.. நடுவில அவர்! பிரபலத்தின் மனைவி குமுறல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த கேத்லீன் புஹ்லே என்பவர் எழுதி உள்ள புத்தகத்தில் பல ஷாக் தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

இப்போது அமெரிக்க அதிபராக உள்ளவர் ஜோ பைடன். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பை வீழ்த்தி அமெரிக்காவின் 46ஆவது அதிபரானார் ஜோ பைடன்!

ஜோ பைடனின் முதல் மனைவி நீலியா ஹண்டர் 1972இல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்தத் தம்பதிக்கு ஹண்டர் பைடன் உட்பட 3 பிள்ளைகள் இருந்தனர்.

புத்தகம்

புத்தகம்

இந்தச் சூழலில் ஹண்டர் பைடனின் முன்னாள் மனைவி கேத்லீன் புஹ்லே If We Break: A Memoir of Marriage, Addiction, and Healing என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் ஹண்டர் பைடன் எப்படி மற்ற பெண்கள் உடன் தொடர்பில் இருந்ததை தான் கண்டுபிடித்தேன் என்பது குறித்தும் அவரது சகோதரர் மனைவி உடனேயே அவர் கள்ள உறவில் இருந்தது குறித்தும் 52 வயதான கேத்லீன் புஹ்லே தனது புத்தகத்தில் விளக்கி உள்ளார்

 கேத்லீன் புஹ்லே

கேத்லீன் புஹ்லே

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது வாழ்க்கையை மாறிவிட்டதாக கேத்லீன் புஹ்லே குறிப்பிடுகிறார். அந்தச் சமயத்தில் ஹண்டர் பைடன் மெக்சிகோ நாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கேத்லீனின் குடும்பத்தினர் அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் ஹண்டர் பைடன் உடன் பாரிஸ் சென்று வந்த படங்களை கேத்லீன் காட்டிக் கொண்டு இருந்தார். ஹண்டர் பைடனின் ஐபேட்டில் தான் படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்.

படங்கள்

படங்கள்

அந்தச் சமயத்தில் அவர்கள் இருந்த அதே ஹோட்டலில் வேறு ஒரு பெண் குளியல் ஆடையில் இருக்கும் படத்தைக் கண்டு கேத்லீன் புஹ்லே அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து தனியே சென்று ஐபேட்டில் இருக்கும் மற்ற படங்களை அவர் பார்த்துள்ளார். அப்போது அவர் அடுத்துப் பார்த்த படம் நெஞ்சை உறை செய்வதாக அமைந்துள்ளது. அந்த பெண்ணுடன் ஹண்டர் பைடன் நெருக்கமாக இருக்கும் படங்களையும் பார்த்துள்ளார்.

 மஸ்காரா

மஸ்காரா

அந்த பெண் இளமையாகவும் அழகாகவும் இருந்ததாகவும் அவள் கண்களிலிருந்து மஸ்காரா சொட்டியதாகவும் கேத்லீன் புஹ்லே தெரிவித்தார். படம் மங்கலாக இருந்தாலும் படத்தில் இருந்த பெண்ணின் சிவப்பு உதடுகளும் அவளுடன் ஹண்டர் எவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார் என்பதும் புரிந்துள்ளது. இதையெல்லாம் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்த அவர் ஹண்டர் பைடனின் சகோதர் பியூ பைடனின் மனைவி ஹாலி பைடனிடம் கூறி உள்ளார்.

ஷாக்

ஷாக்

அங்கு தான் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்துள்ளது. படங்கள் குறித்துக் கூறியதும் ஹாலி பைடன், "இப்போது அவரை நீ விட்டுச் சென்றால் கண்டிப்பாக அவர் மற்றொரு நபருடன் சென்றுவிடுவார்" என்று கூறி உள்ளார். இருப்பினும், அந்த படங்களை கேத்லீன் புஹ்லேவால் மறக்க முடியவில்லை. இதையடுத்து ஹண்டர் பைடனிடன் வெளிப்படையாகவே கேட்டுள்ளார். முதலில் இதை மறுத்த ஹண்டர் பைடன், பின்னர் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்.

 5 முறை

5 முறை

முதலில் அப்பெண் உடன் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்று கூறி அவர், பின்னர் அதையும் ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் ஹண்டர் கூறியது தான் கேத்லீன் புஹ்லேவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதாவது மொத்தம் 5 முறை வெளிநாடுகளில் இருக்கும் போது வேறு ஒரு பெண்ணுடன் ஹண்டர் பைடன் நெருக்கமாக இருந்துள்ளார். முதல் முறை ஸ்பெயின் நாட்டிலும் அடுத்து மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இருந்துள்ளார்.

 அடுத்த உறவு

அடுத்த உறவு

இருப்பினும் ஹண்டர் பைடன் ஏதேதோ சொல்லி கேத்லீன் புஹ்லேவை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இருப்பினும், கேத்லீன் புஹ்லே கடந்த 2016 டிசம்பர் மாதம் விவகாரத்துக் கோரி விண்ணப்பித்தார். அதற்கு முன் சுமார் ஓராண்டாகவே இருவரும் தனியாகவே இருந்து வந்துள்ளனர். இருவரும் பிரிந்து இருந்த சமயத்தில் தான், ஹண்டர் பைடன், ஹாலி என்ற பெண் உடன் உடன் உறவைக் கொண்டு இருந்துள்ளார். ஹாலி வேறு யாரும் இல்லை ஹண்டர் பைடனின் சகோதரர் மனைவிதான். ஹண்டரின் சகோதரர் இறந்த 5 மாதங்கள் மட்டுமே அப்போது ஆன நிலையில் இருவரும் உறவில் இருந்துள்ளனர்.

 பல பெண்கள்

பல பெண்கள்

இருவருக்கும் இடையே இருக்கும் உறவு குறித்துப் பல மாதங்களுக்குப் பின்னரே கேத்லீன் புஹ்லேவுக்கு தெரிய வந்துள்ளது. அப்போது ஹண்டர் பைடனின் ஐபோனை சோதித்த போது, ஹாலி உடன் மட்டுமின்றி பல பெண்களுக்கு பாலியல் ரீதியான மெசேஜ்களை அனுப்பி உள்ளது தெரிய வந்துள்ளது. அதன் பின்னரே அவர் ஹண்டர் பைடனின் இருந்து உடனடியாக விவாகரத்து பெற்றுள்ளார்.

 காரணம்

காரணம்

ஹண்டர் பைடனால் தனது தந்தை மற்றும் சகோதரரைப் போல பொது வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அவர் இப்படி தனது வாழ்க்கையை மோசமாக்கிக் கொண்டு இருக்கலாம் என்றும் கேத்லீன் புஹ்லே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1993இல் திருமணம் செய்து கொண்ட ஹண்டர் பைடன்-கேத்லீன் புஹ்லே, இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் 2017இல் விவகாரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+