டிரம்பால் நமக்கு தொல்லைதான்.. அமெரிக்கா பண்ண வேலையை பாருங்க.. இந்தியாவுக்கு இரட்டை தலைவலி
வாஷிங்டன்: உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் மீதான இந்தியாவின் அதிக வரிவிதிப்பு தொடர்பான மனுவை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஏற்கனவே ஸ்டீல் மற்றும் அலுமினிய வரிவிதிப்புகள் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த நிலையில், இந்தியாவுக்கு இது ஒரு இரட்டைப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தியா, தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 25% வரிவிதிப்புகளை WTO-வில் ஆலோசனை மூலம் சரிசெய்ய முயற்சித்தது. ஆனால், அமெரிக்கா இந்த வரிவிதிப்புகள் தேசிய பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டவை என்பதால், WTO-வின் விதிகள் படி ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்தியாவின் பதில்
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை WTO விதிகளுக்கு எதிரானது என இந்தியா கருதுகிறது. தங்கள் நாட்டு ஏற்றுமதி நலன்களை, குறிப்பாக ஆட்டோ பாகங்கள் ஏற்றுமதியைப் பாதுகாக்க இந்தியா விரும்புகிறது. இந்த புதிய வரிவிதிப்புகள் இந்திய ஏற்றுமதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்தியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், சர்வதேச வர்த்தக விதிகளைப் பின்பற்றவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், அமெரிக்கா தனது முடிவில் உறுதியாக உள்ளது.
வர்த்தக உறவில் எரிச்சல்
இந்த விவகாரம், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக உறவில் புதிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உரிமைகளைப் பாதுகாக்க WTO வழியில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரிவிதிப்புகள், இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் கணிசமான சரிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் ஏற்றுமதியில் $2.2 பில்லியன் மதிப்புள்ள ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ பாகங்களுக்கு 25% வரி விதிக்கப்படும். சோனா BLW போன்ற நிறுவனங்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து பெறுவதால், இந்த வரி உயர்வு அவர்களின் லாபத்தைப் பாதிக்கலாம். இந்த வர்த்தகப் போர், இரு நாடுகளுக்கிடையே புதிய உலக வர்த்தக ஒழுங்கை நிலைநாட்ட இந்தியா எடுக்கும் முயற்சிகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
டிரம்ப் என்னதான் நண்பன் போல பேசினாலும் முக்கிய விஷயங்களில் இந்தியாவிற்கு எந்த சலுகையையும் கொடுப்பது இல்லை. பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல் என்ற பாணியில் டிரம்ப் காய் நகர்த்துவது குறிப்பிடத்தக்கது.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications