அணு ஆயுத முப்படைகளை கட்டமைக்கும் சீனா... உலகப் போருக்கு தயாராகிறதா? அதிர்ச்சி தரும் யு.எஸ். அறிக்கை
வாஷிங்டன்: சீனா அணு ஆயுத முப்படைகளை அதிவேகமாக கட்டமைத்து வருவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சீனாவின் ராணுவ வலிமை தொடர்பான ஆய்வறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் லடாக் எல்லையில் இந்திய ராணுவத்துடனான சீனாவின் மோதல் போக்கு, அமெரிக்கா-இந்தியா உறவை சீர்குலைக்கும் சீனாவின் போக்கு, சீனாவின் அணு ஆயுத பெருக்கம் ஆகியவை குறித்து விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான எல்லை மோதல்
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 2020-ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இந்திய கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் சீனாவின் ஊடுருவல் தொடங்கியது. அப்போது இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே பல இடங்களில் கைகலப்புகள் நிகழ்ந்தன. இமயமலை பகுதியில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை சீனா கட்டமைத்திருக்கிறது.

இந்திய எல்லையில் சீனாவின் கிராமங்கள்
திபெத் சுயாட்சி பிரதேசம், இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா புதிய பொதுமக்கள் குடியிருப்பை கட்டமைத்திருக்கிறது. எல்லை கடந்த ஊடுருவல் நடவடிக்கைகளுக்காக இந்த கட்டமைப்பை சீனா உருவாக்கியது. இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சீனாவின் ஊடுருவல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

அணு ஆயுத குவிப்பில் சீனா
சீனாவைப் பொறுத்தவரையில் முப்படைகளையும் அணு ஆயுதமயமாக்கி உள்ளது. சீனாவிடம் தற்போதைய நிலையில் 200 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் இதனை இரு மடங்காக அதிகரிக்க சீனா திட்டமிட்டிருக்கிறது. சீனாவின் இந்த அணு ஆயுத விரிவாக்கம் சர்வதேச நாடுகளுக்கு கவலை தரக் கூடியதாகும். அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிக்கும். காற்று, நிலம், கடல், விண்வெளி என அனைத்து நிலைகளிலும் அமெரிக்காவுக்கு சவால் விடுகிறது சீன ராணுவம். இவ்வாறு அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான பேச்சுவார்த்தை
லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து சீனாவுடன் 13 கட்டமாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவே இல்லை. அண்மையில் திடீரென எல்லை பாதுகாப்புக்கான சட்டத்தை சீனா நிறைவேற்றியது. சீனாவின் இத்தகைய இடைவிடாத நடவடிக்கைகளில் இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியான பதற்றத்தை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பூமிக்கு அடியில் 3.4 கிமீ.. வெறும் சூடு நீரை வைத்து சீனா புதிய சாதனை! அவிழ்க்கப்படும் மர்மங்கள் -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications