அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு: 1,06,170 பேருக்கு தொற்று; 835 பேர் பலி
வாஷிங்டன்: உலக நாடுகளில் அமெரிக்காவில் அதிஉச்சமாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,06,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் 835 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,92,99,560 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 43,93,243 ஆக உள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,76,04,419.
அனைத்து நாடுகளிலும் நேற்று ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 6,09,073. ஒருநாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 9,674. உலக நாடுகளில் நேற்று கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,58,413.

அமெரிக்காவில் அதிக பாதிப்பு
உலக நாடுகளில் நேற்று அதிகமான கொரோனா பாதிப்பு அமெரிக்காவில்தான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,06,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று 38,696 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். அமெரிக்காவில் நேற்று கொரோனாவுக்கு 835 பேர் மரணம் அடைந்தனர்.

2-வது இடத்தில் ஈரான்
கொரோனா பாதிப்பில் ஈரான் 2-வது இடத்தில் இருக்கிறது. ஈரானில் நேற்று மட்டும் 50,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 29,331 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டனர். ஈரானில் கொரோனாவால் நேற்று மட்டும் 625 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளிலேயே இந்தோனேசியா, பிரேசிலில் கொரோனா மரணங்கள் மிக அதிகமாக உள்ளன. பிரேசிலில் நேற்று மட்டும் 1,017 பேர் கொரோனாவால் மாண்டனர். பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,197.

பிரேசிலில் மரணங்கள் அதிகரிப்பு
பிரேசிலை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நேற்று 35,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; மேலும் 440 பேர் உயிரிழந்தனர். முந்தைய நாள் பாதிப்பை விட இந்தியாவில் இது அதிகமாகும். இந்தியாவில் நேற்று 37,145 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
Recommended Video

இந்தோனேசியாவில் 1180 பேர் பலி
இந்தோனேசியா, ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் அதிகமாக உள்ளன. இந்தோனேசியாவில் நேற்று மட்டும் 1,180 பேரும் ரஷ்யாவில் நேற்று 805 பேரும் கொரோனாவால் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் 553 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை முறையே 28,114, 26,852 மற்றும் 21,692 என பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications