கொரோனா கோரத்தாண்டவம்- ஒரே நாளில் அமெரிக்காவில் 1,203, ரஷ்யாவில் 1,159 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்/மாஸ்கோ: உலக நாடுகளில் உருமாறிய கொரோனா ஏ.ஒய் 4.2 அதிவேகமாக பரவி வருகிறது. ரஷ்யாவில் ஒரே நாளில் 1,159 பேரும் அமெரிக்காவில் 1,203 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பெரும் அச்சம் நிலவுகிறது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 246,242,696. உலக நாடுகளின் மொத்த கொரோனா மரணங்கள் 50 லட்சத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,995,882. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மீண்டவர்கள் எண்ணிக்கை 223,123,452

ல நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் உக்கிரம் காட்டி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் கிடுகிடுவென அதிகரித்தும் வருகின்றன. குறிப்பாக உருமாறிய கொரோனா ஏ.ஒய் 4.2வின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது.

அமெரிக்காவில் அதிக பாதிப்பு

அமெரிக்காவில் அதிக பாதிப்பு

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 472,005. உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,812. உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 353,543. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 76,063 ஆக பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,203 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 4,66,82,748 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இங்கு இதுவரை மொத்தம் 763,779 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் அதிக மரணங்கள்

ரஷ்யாவில் அதிக மரணங்கள்

ரஷ்யாவில் நேற்று ஒருநாளில் 40,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரஷ்யாவில் நேற்று மட்டும் 1,159 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,92,697. இங்கு மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,35,057.

இங்கிலாந்து 3-வது இடம்

இங்கிலாந்து 3-வது இடம்

ரஷ்யாவை தொடர்ந்து இங்கிலாந்தில் நேற்று 39,842 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இங்கிலாந்தில் 165 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ஜெர்மனியில் 26,610; உக்ரைனில் 26,071; துருக்கியில் 25,528 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒருநாள் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. ஆனால் ஒருநாள் கொரோனா மரணங்கள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

நாடுகளின் கொரோனா மரணங்கள்

நாடுகளின் கொரோனா மரணங்கள்

இந்தியாவில் 803; உக்ரைனில் 576; ருமேனியாவில் 413; பிரேசிலில் 399, மெக்சிகோவில் 326 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் கடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+