அமெரிக்காவில் கொரோனா மீண்டும் கோரத்தாண்டவம்.. ஒரே நாளில் 2,005 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மீண்டும் கோரத்தாண்டவமாடி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 2005 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,51,734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
உலகம் முழுவதும் 7,479 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 4,01,882 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிக பாதிப்பு
உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு உச்சமாக இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 80,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,092,362. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,01,759. அமெரிக்காவில் இதுவரை 35,814,326 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

ஒரே நாளில் 2005 பேர் பலி
உலக அளவில் அமெரிக்காவில்தான் ஒருநாள் கொரோனா மரணங்கள் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 2005 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 7,51,811 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் நேற்று 49,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 179 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ரஷ்யா 3-வது இடம்
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் நேற்று 34,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 1028 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து உக்ரைன் 495, மெக்சிகோ 446, ருமேனியா 414, பிரேசில் 401 என ஒருநாள் கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.

10-வது இடத்தில் இந்தியா
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. கொரோனா மரணங்கள் பட்டியலிலும் உலக அளவில் 10-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 160 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 452,844 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
-
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications