வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சொந்தமானது அருணாசலப் பிரதேசம்.. சீனாவுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகையில், அருணாசலப் பிரதேசம் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் பகுதியாக இருந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய, சீன எல்லை விவகாரம் குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் இதுதொடர்பான கேள்வி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கேட்கப்பட்டது.

லடாக்கை உரிமை கொண்டாடும் சீனா... கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு... மீண்டும் பீஜிங் சண்டித்தனம்!! லடாக்கை உரிமை கொண்டாடும் சீனா... கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு... மீண்டும் பீஜிங் சண்டித்தனம்!!

சிக்கல்

சிக்கல்

அப்போது, ''இந்திய, சீன எல்லை விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் பகுதியாக அருணாசலப் பிரதேசம் இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனை மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. ராஜாங்க ரீதியில் இந்த சிக்கலை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஊடுருவல்

ஊடுருவல்

அதேசமயம் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் ஒருதலைபட்சமான முடிவை எடுப்பதற்கு வாஷிங்டன் விரும்பவில்லை. ராணுவ அல்லது மக்கள் ஊடுருவல் மூலம் எல்லையை மாற்றி அமைத்துக் கொள்வதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம்.

எல்லை விவகாரம்

எல்லை விவகாரம்

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தியாவும், சீனாவும் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஆனால், ராணுவ பலத்தை இருதரப்பிலும் பயன்படுத்தக் கூடாது. இருநாடுகளுக்கும் இடையிலான எல்லை விவகாரத்தை கவனமாக கூர்ந்து கவனித்து வருகிறோம். முன்பும் இருதரப்பிலும் ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றுதான் கூறி வந்தோம். இப்போதும் அதைத்தான் கூறுகிறோம்'' என்றார்.

அருணாசலப் பிரதேசம்

அருணாசலப் பிரதேசம்

சமீபத்தில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவ் லிஜியன் அளித்தி இருந்த பேட்டியில், ''அருணாசலப் பிரதேசம் சீனாவின் தெற்கு திபெத்துக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்தே அமெரிக்கா இந்த விஷயத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

கட்டிடங்கள்

கட்டிடங்கள்

இதுமட்டுமில்லை, இந்தியாவின் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்து வரும் லடாக் பகுதியையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்து இருந்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் அளித்திருந்த பேட்டியில், ''லடாக்கை யூனியன் பிரதேசமாக இந்தியா அங்கீகரித்து இருப்பதையும், அங்கு சட்டத்திற்கு விரோதமாக கட்டிடங்கள் கட்டுவதையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

மறுப்பு

மறுப்பு

சீனா சட்டத்திற்கு விரோதாமாக லடாக்கை யூனியன் பிரதேசமாக அங்கீகரித்து இருப்பதாக சீனா தெரிவித்து இருந்தது. இதை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. 1959ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட எல்லையை தாங்கள் மதிப்பதாக சீனா தெரிவித்து இருந்தது. இதற்கும் இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இதை இந்தியா மறுத்து இருந்தது.

English summary
US says Arunachal Pradesh part of India for past 6 decades
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X