குணமானவர்களின் ரத்தத்தில் கொரோனாவை தடுக்கும் சூப்பர் ஆன்டிபாடிகள்.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் சூப்பரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நோயாளிகளின் இரத்தத்தில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் எது என்பதை அமெரிக்காவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்,
Recommended Video
இந்த ஆன்டிபாடிகளால் நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸான SARS-CoV-2 இலிருந்து பாதுகாக்க முடியும். விலங்குகள் மற்றும் மனித உயிரணு கலாச்சாரங்களில் ஆன்டிபாடி பரிசோதனையின் போது இதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்துகள், தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதற்கான பரிசோதனை முயற்சிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி,இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.

சூப்பர் முன்னேற்றம்
சில மருந்துகள் சோதனை ரீதியாக நல்ல பலனை தந்துள்ளன. அடுத்த கட்ட சோதனைக்கு சென்றுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரானாவுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் செய்து பாரக்கப்படுகிறது. அதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கிறது.

கொரோனாவை தடுக்கும்
இந்த சூழலில் அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்தவர்களின் உடலில், கொரோனாவுக்கு எதிராக உள்ள ஆன்டிபாடிகளை கண்டுபிடித்துள்ளனர். அதாவது நோய் எதிர்ப்பு செல்களை கண்டுபிடித்துள்ளனர்., இந்த ஆன்டிபாடிகள் SARS-CoV-2 என்ற இப்போது பரவி வரும் கொரோனாவில் இருந்து உடலை பாதுகாக்கும் ஆற்றல் உடையவை ஆகும்.

எப்போது செலுத்தினால் பாதுகாப்பு
இந்த ஆன்டிபாடிகளை கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் நோயாளிகளுக்கு செலுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர், இதனால் இது வைரஸின் அளவைக் குறைத்து கடுமையானதாக மாறும் முன்பு பாதுகாக்க முடியும் என்கிறார்கள்.

கூடுதல் நம்பிக்கை தரும் ஆய்வு
இந்த ஆன்டிபாடிகள் சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் மோசமான பாதிப்பு அடைந்தவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காலிகமான பாதுகாப்பு, தடுப்பூசி போன்ற பாதுகாப்பை வழங்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.. இந்த ஆய்வு திங்களன்று சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டது, மேலும் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்புகளாக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளின் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கூடுதல் சோதனைகளுக்கு இந்த ஆய்வு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications