விலைவாசி எகிறிப்போச்சு.. இந்தியா மீது போட்ட 50% வரியை தூக்குங்க! டிரம்புக்கு அமெரிக்காவில் நெருக்கடி
வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்கா இந்தியா இடையே நட்புறவு பாதிக்கப்பட்டு வருவதாகவும், சொந்த நாட்டிலேயே மக்கள் விலை வாசி உயர்வால் அவதி அடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிபராக பதவியேற்றதில் இருந்தே அமெரிக்கா நலன் சார்ந்த முடிவுகளையே எடுப்பதாக கூறி உலக நாடுகள் மீது வரி விதிப்பு உள்பட அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்.

இந்தியா மீது வரி விதிப்பு
இந்தியா தனது நட்பு நாடு என்று டிரம்ப் சொல்லி வந்தாலும், உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் செய்யும் விவகாரத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற முடிவுக்கு இந்தியா பணியாததால் இந்தியா மீதும் அதிரடி வரி விதிப்பை மேற்கொண்டார். இதேபோல் சீனா மீதும் அதிரடி வரி விதிப்பை மேற்கொண்டு பின்னர் வரி விதிப்பு நடவடிக்கையில் இருந்து பின் வாங்கிக்கொண்டார்.
இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகம் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இறக்குமதி வரி விதிப்பதால் சம்பந்தப்பட்ட பொருட்களை அந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்பதாலும், இதனால் எதிர்காலத்தில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் டிரம்ப் நினைத்தார். ஆனால் அவரது முடிவு அவருக்கே பாதகமாக அமைந்தது.
டிரம்ப்பின் அறிவிப்பை ரத்து செய்ய தீர்மானம்
அதாவது வரி காரணமாக அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட கணிசமாக அதிகரித்துவிட்டது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வரி காரணமாக அதிகரித்ததால் மக்கள் கோபமடைந்துள்ளனர். ட்ரம்பின் 50 சதவீத வரியால் இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவும் பாதிக்கப்பட்டு விட்டது. இது அமெரிக்காவுக்கே பாதகம் என்று அவரது சொந்த நாட்டில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவுக்கு எதிராக உள்ள ரஷ்யாவுடன் இந்தியாவின் நட்புறவு மேலும் அதிகரித்து வருவதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பலன் தரவில்லை
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக இந்தியா - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், அமெரிக்காவின் வட கரோலினா, வட டெக்ஸான் ஆகிய மாகாணங்கள் இந்தியாவுடன் வர்த்தக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் தொடர்பில் இருந்து வருகின்றன.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக இந்த மாகாணங்களில் வசிக்கும் மக்கள் வர்த்தக பாதிப்பாலும், விலை வாசி உயர்வாலும் அவதி அடைகின்றனர். டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் நலன், பாதுகாப்புக்கு பலன் தரவில்லை. மாறாக எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றது.
டிரம்புக்கு நெருக்கடி
விநியோக சங்கிலிகளைச் சீர்குலைக்கின்றது. அமெரிக்க தொழிலாளர்களுக்கே இது பாதகத்தை ஏற்படுத்துகிறது. வரி தொடர்பான பிரச்சினையில் முழு தீர்வு எட்டப்பட்டால் தான் அமெரிக்கா - இந்தியா இடையேயான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும்" என்று கூறினார். சொந்த நாட்டிலேயே அமெரிக்க அதிபரின் முடிவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications