இஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா.. செனட்டில் நிறைவேறியது அதிரடி சட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளான இஸ்ரேல், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவை மாற்றும் ஒரு சட்டத்தை அமெரிக்க செனட் நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத் திருத்தம் மனிதாபிமான உதவி, பயங்கரவாத எதிர்ப்பு, கடற் திருட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

இந்த மசோதா அமெரிக்க காங்கிரஸின் சேம்பர்ஸ் - பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகியவற்றில் நிறைவேறிய பின்னர் சட்டமாக கையெழுத்திடப்படும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டம், மேற்கண்ட அவைகளில், இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேட்டோ நாடுகள்

நேட்டோ நாடுகள்

அமெரிக்க-ஹிந்து ஃபவுண்டேசன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியா-அமெரிக்கா நல்லுறவை அதிகரிப்பதில் செனட் உறுப்பினர்களான, கார்னின் மற்றும் வார்னர் எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறோம். "நேட்டோ போன்ற நிலைக்கு இந்தியாவை உயர்த்துவது மிக முக்கியமானது, இப்போது முன்னெப்போதையும் விட, அமெரிக்கா, இந்தியா மற்றும் முழு பிராந்தியத்திற்கும் அதுதான் அவசியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம்

அங்கீகாரம்

"நாங்கள் இந்த சட்டத்தை அப்படியே நிறைவேற்றுகிறோமா அல்லது தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் சில திருத்தத்துடன் அதைச் செய்கிறோமா என்பது முக்கியமில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்க-இந்தியா கூட்டணியின் முக்கியத்துவத்தை உறுதியான முறையில் நாங்கள் அங்கீகரிக்கிறோம், " என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர், ஷெர்மன்.

முக்கிய கூட்டாளி

முக்கிய கூட்டாளி

2016 ஆம் ஆண்டில் இந்தியாவை ஒரு "முக்கிய பாதுகாப்பு கூட்டாளி" என்று அமெரிக்கா அங்கீகரித்தது. இது அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு ஈடாக, அமெரிக்காவிலிருந்து மேம்பட்ட மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கும் அறிவிப்பு ஆகும். எதிர்காலத்தில் நீடித்த ஒத்துழைப்பு இரு நாடுகள் நடுவே நிலவுவதையும், இது உறுதி செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+