3-ம் பாலினத்தவர் நினைவு நாளில் துயரம்.. அமெரிக்காவின் கே கிளப்பில் துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில் கே நைட் கிளப்பில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் படுகொலை செய்யப்படுவோரை நினைவு கொள்ளும் வகையில் 3-ம் பாலினத்தவர் நினைவு நாள் நவம்பர் 20-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நினைவு நாளில் அமெரிக்காவில் கே நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தின் கொலோராடா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் கே நைட் கிளப் உள்ளது. இந்த கிளப்பில்தான் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த நபரிடம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் நைட் கிளப் பகுதி பெரும் பதற்றத்துடன் இருக்கிறது.












Click it and Unblock the Notifications